book

விகடன் இயர் புக் 2020

Vikatan Year Book 2020

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :போட்டித்தேர்வுகள்
பக்கங்கள் :768
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388104456
குறிச்சொற்கள் :Vikatan year book
Add to Cart

ஒவ்வோர் ஆண்டும் பலதரப்பினரும் பயன்பெறத்தக்க வகையில் வெளியிடப்பட்டு வருகிறது விகடன் இயர் புக். 2013-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ‘விகடன் இயர் புக்’ அரிய தகவல் களஞ்சியமாக விளங்குகிறது என்பது படித்தோர், பயன்பெற்றோரின் கருத்தாகும். அந்த வரிசையில், விகடன் இயர் புக் 2020-ம் அறிவுக்குத் தேவையான அரிய தகவல்களை ஒருசேரக் குவிந்திருக்கும் அறிவுப் பெட்டகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியச் சட்டங்கள், சட்ட முன்வரைவுகள்-2019, விருதுகள் 2019-ம் ஆண்டு நோபல் பரிசு விவரங்கள், உலக, இந்தியா, தமிழக நடப்பு நிகழ்வுகள், கீழடி-கூடி இழுத்த தேர், ஐ.ஏ.எஸ் வினாத்தாள்கள்-2019, ஐ.ஏ.எஸ் தேர்வெழுதியோரின் அனுபவப் பகிர்வுகள், SSC தேர்வுகள்-தெரிந்ததும் தெரியாததும், காய்கனி நமக்கினி, சந்திரயான்-2 பற்றிய ஆய்வுக் கட்டுரை, விண்வெளிக் கலைச்சொற்கள், காஷ்மீரின் கதை, முத்திரை முகங்கள், முத்திரைச் செய்திகள்.. எல்லா தகவலும் இதிலுண்டு, இதில் இல்லாதவை வேறெதிலும் இராது என மெச்சும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது விகடன் இயர் புக்-2020. மேலும், விளையாட்டுத் துறை, அறிவியல் தொழில்நுட்பத் தகவல்கள், யூ.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வினா விடைகள்.. இப்படி போட்டித் தேர்வு எழுதுவோருக்குத் துணைபுரியும் அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் விகடன் இயர்புக்-2020 உங்கள் வெற்றியின் வழிகாட்டியாகத் திகழும்! விகடன் இயர்புக்-2020 எனும் அறிவுச் சுரங்கத்துக்குள் செல்லுங்கள் வெல்லுங்கள்! படித்துவிட்டு உங்கள் கருத்துகளை மின்னஞ்சலில் பகிருங்கள்.