book

கடவுளைத் தேடாதீர்கள்

Kadavulai thedatheergal

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தென்கச்சி.கோ. சுவாமிநாதன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :135
பதிப்பு :17
Published on :2016
ISBN :9788189780869
குறிச்சொற்கள் :விஷயங்கள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்
Add to Cart

விரிந்து பரந்த உலகத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உண்டு. செடியில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள் முதல் பட்டுப்போன பிறகும் பலன் கொடுக்கும் மரங்கள் வரை, மழைக்காலத் தேவைக்கென கோடையிலேயே சேமிக்கும் எறும்புகள் முதல் தன் இனத்தோடு பகிர்ந்துண்ணும் காகங்கள் வரை மனிதர்களுக்கு வாழ்க்கைக்கானப் படிப்பினைகளை வழங்கிக்கொண்டே இருக்கின்றன.
இந்தப் படிப்பினைகளை உணராமல், பிரச்னைகளுக்கு வடிகால் தேடி ஆன்மிகத்தை நாடுகின்ற மனிதர்கள் போலிகளின் கைகளில் சிக்குண்டு ஏமாறுவது கசக்கின்ற உண்மை.

உண்மையான ஆன்மிகம் எது? உய்த்துணர வேண்டிய வாழ்வின் உட்பொருள்கள் என்னென்ன? மெய்ஞானம் முன்மொழியும் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது? இந்தக் கேள்விகளுக்கான விளக்கங்களோடு ‘சக்தி விகடன்’ இதழில் தென்கச்சி கோ.சுவாமிநாதன் எழுதிய ‘கலகல’ கதைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.

அடுத்தவர்களுக்குச் சொல்லும் ஆறுதல்களில், உரிய நேரத்தில் செய்யும் உதவிகளில், ஆத்மார்த்தமான பாசப் பகிர்தல்களில் வெளிப்படும் இறை அனுபவத்தை உணராமல், ஆலயங்களில் இறைவனைத் தேடும் பேதைகளின் தலையில் பேனாவால் குட்டியிருக்கிறார் தென்கச்சி.

குழலின் உட்சென்று வெளிவரும் காற்று இசையாக மோட்சம் எய்துதல் போல _ சிப்பியில் விழுகிற மழைத்துளி முத்தாகப் பரிணமித்தல் போல தென்கச்சியின் சிந்தனையில் விழுந்து வார்த்தைகளில் வெளிப்பட்டிருக்கும் இந்தக் கதைகள், காயம்பட்ட மனதுக்கு ஆறுதல் மருந்தாக இருக்கின்றன. தேடல் மனம் கொண்டவர்களுக்கு தத்துவ வெளிச்சமாகவும் தரிசனம் தருகின்றன.

அரிய கருத்துக்களை எளிய மொழியில் இயல்பான நகைச்சுவையோடு எழுதியிருக்கும் தென்கச்சி உங்களை மகிழ்விக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைக்கிறார். இந்தத் தத்துவத் தரிசனத்தில் நம்மை பரிசீலிப்போம்!