book

கபீர்தாசர்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2018
Add to Cart

இந்திய தேசம் கண்ட மகா ஞானிகளில் ஒருவர் கபீர்தாசர். எல்லா உயிர்களிலும் இறைவன் ஒளிர்கிறான் என்பதை பல இடங்களில் மெய்ப்பித்த அவதாரப் புருஷர். 1440-ம் ஆண்டு (1398-ம் ஆண்டு என்ற கருத்தும் உண்டு) வாரணாசியில் கங்கைக்கரையில் பிறந்தவர் என்றும், இவரை தமால், ஜீஜா பீபி என்ற இஸ்லாமிய தம்பதிகள் வளர்த்தனர் என்றும் இவரது சரிதை கூறுகிறது. திருக்குரானைத் திறந்து பார்த்ததும் தென்பட்ட 'கபீர்' என்ற சொல்லே இவருக்குப் பெயராகச் சூட்டப்பட்டது. `கபீர்’ என்றால் `பெரிய’ என்று பொருள். ஸ்ரீமன் நாராயணரின் ஆணைப்படி ஸ்ரீசுகப்பிரம்மமே கபீராக அவதரித்தார் என்றும் கூறப்படுகிறது. நெசவாளி குடும்பத்தில் வளர்ந்த கபீர், இறையருளால் நல்ல குரல் வளமும் பாடும் திறமையும் பெற்று இறைவனைப் பாடி வளர்ந்துவந்தார். பாடுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்ததால், நெசவு செய்வதில் சற்றும் விருப்பமின்றி இருந்தார். இரவில் இவர் ஒரு முழம் நெய்தால், இவரது பாடலைக் கேட்டபடியே இறைவன் ஒரு முழம் நெய்வாராம்.