சொல் அல்ல செயல்
₹223.25₹235 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அதிஷா
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788184767841
குறிச்சொற்கள் :chennai book fair 2018
Add to Cartதனிமனிதனுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய குணங்கள், தகுதிகள், உணர்வுகள் யாவும் முற்றிலும் மாறுபட்டிருக்கும் நிலை - ஒரு சமூக நோய். ஊழல், ஏய்ப்பு, வன்முறை, அநியாயம், சுயநலம், நன்மை, மனிதாபிமானம், பொதுநலம், உதவி... இதில் எதை நாம் எதிர்பார்க்கிறோம்? எதைக் கொடுக்கிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். பெற்றோர் மீது உண்மையான அக்கறை, பெரியோர் மீது நன்மரியாதை, சுற்றியுள்ளோர் மீது அன்பு, எளிய மனிதன் மீதான அக்கறை - இப்படியான இயல்பான குணங்களை இழந்துவரும் நாம் எப்படி ஆரோக்கியமான வாழ்வை வாழமுடியும்? பல நாள் பிரச்னைக்கு ஒரே நாளில் தீர்வு கிடைத்துவிடக்கூடும். ஆனால், ஒரு நாள் பிரச்னைக்கு பல மாதங்கள் ஆகியும் தீர்வின்றி தவிப்போம்... இது குடும்பம், நோய், கல்வி, சமுதாயம், பணியிடம் என பல தரவுகள் வழியே ஏற்படுவது. மாறவேண்டியது நாம்தான்; பின் சமூகம் தானாக மாறும். இது சுலபம் அல்ல. பொறுமையும் காத்திருப்பும், நற்காரியங்களுக்காகப் போராடத் தயாராகிற மனமும் எடுத்த காரியத்தில் உறுதி குறையாதிருக்கும் நிலைத்தன்மையும் வேண்டும். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், மணல் கொள்ளையர்கள், இயற்கையைச் சூறையாடும் மத நிறுவனங்கள், சுற்றுச்சூழலை விழுங்கும் சாமியார்கள், பிணவறைக் காப்பாளர்கள், கழிவறைகளைச் சுத்தப்படுத்துகிறவர்கள், ஹோட்டல் சர்வர், போட்டோகிராபர் என இவர் தொடாத மனிதர்கள் இல்லை. ஒரு சாமான்யன் முதற்கொண்டு, பல்வேறு மனிதர்களின் வாழ்வியல் கூறுகளில் உள்ள தீய அடைப்புகளை நீக்கினால் மனித வாழ்வு எவ்வளவு சிறப்புடையதாக இருக்கும் என்பதை மனித உணர்வுகளின் மீதுள்ள அக்கறையால் ஆதங்கப்பட்டிருக்கிறார் நூல் ஆசிரியர் அதிஷா. சொல்லிக்கொண்டிருக்காமல் இனி செய்யத் தொடங்கத் தூண்டும் வழிகாட்டியாக இந்த நூல் உங்கள் கைகளில்...