book

ஶ்ரீமத் வால்மீகி இராமாயணம்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :368
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :chennai book fair 2018
Add to Cart

மனித நாகரீகத்தின் வெளிப்பாடாய் வந்துதித்தது ஸ்ரீமத் வால்மீகி  இராமாயணம். காவியம் என்கிற அழகு ஒருபக்கம் இருக்க, கவிதைச் சுவை தனித்திருக்க எது வாழ்வு எப்படி வாழ வேண்டும் என்று சொல்வது ஸ்ரீமத் வால்மீகி  இராமாயணம்.
என்ன சொல்லப் போகிறோம், எப்படி சொல்லப்போகிறோம் என்பதுதான் இலக்கியத்தின் இலக்கணம் என்றால் இவை ஒன்றே ஒன்று போட்டி போட்டுக் கொண்டு மிளிர்கின்ற காவியம் ஸ்ரீமத் வால்மீகி  இராமாயணம்.
நாகரீகமான மனிதர்கள், நல்லது வேண்டுமென்று ஏங்குபவர்கள் இக்காவியத்தை படித்தே ஆக வேண்டும். இக்கட்டான சூழ்நிலைகளிளும் இந்த கதாநாயகன் ஸ்ரீ இராமன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை கவனிக்கும் பொழுது மனம் விரிவடையும். படிப்பதற்காக எழுதும்பொழுதே மனதை கவருகிற இக்காவியம் எழுதுவதற்காக படிக்கும் பொழுது பல இடங்களில் திகைப்படைய வைக்கிறது. 
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கத்திய என்று தோராயமாக சொல்கிறார்கள். அப்படியானால் இந்த தேசத்தின் வளமைப் பற்றியும் பெருமை எழுகிறது. குளிரும், வெய்யிலும், நீரும், காற்றும் சரியான பருவங்களும் இங்கு நாகரீகத்தை கொணர்ந்திருக்கின்றன. அப்பொழுது உலகத்தின் மறுபக்கம் வெறும் சீராக இருந்திருக்க வேண்டும். இவை அனைத்தும் இறையருள் இந்த சூழ்நிலை பாரத கண்டத்தின் பொக்கிஷம். அடித்து தின்பதே வாழ்க்கை என்பவரை அழிக்கின்ற நாகரீகம் வந்து விட்டது. என்ன ஒரு வேதனை என்றால் இன்னமும் அடித்து தின்பவர்கள் இருக்கிறார்கள். அழிக்க வேண்டியதும் இருக்கிறது. எனவே ஸ்ரீமத் வால்மேகி இராமாயணம் போன்ற காவியங்கள் தொடர்ந்து பலம் பெறுகின்றன.
ஸ்ரீ இராமனைக் கொண்டாடுவதா, மகரிஷி வால்மீகியை கொண்டாடுவதை, அல்லது எல்லாம் வல்ல பரம்பொருளின் லீலையா என்கிறபடிதான் ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தை அணுக வேண்டியிருக்கிறது.
உங்களுக்கும் இந்த திகைப்பு ஏற்பட என் பிரார்த்தனைகள். -