என் கண்ணின் மணிகளுக்கு
En Kannin Manigalukku
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவக்குமார்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :5
Published on :2013
Add to Cartமாணவர்களே ! பாத்துக்குங்க. அவங்க பின்னாடி சுத்திட்டு நீங்க கோட்டை விட்டுடுவீங்க. ஆனா அவங்க படிச்சுடுவாங்க" என மாணவர்களுக்கு புரிகிற விதத்தில் சொல்வது சுவாரஸ்யம் !
இந்த புத்தகத்தில் சிவகுமார் சொன்ன இன்னும் சில சுவாரஸ்ய வரிகள் அவர் எழுத்திலேயே இதோ: "நல்லா படிச்சு வேலைக்கு போன பிறகு காதலிங்க. நானே சப்போர்ட் பண்றேன். ஆனா தோலை காதலிக்காதீர்கள். உள்ளத்தை காதலியுங்கள். தோல் எப்படியும் ஒரு நாளைக்கு சுருங்கும். சலிப்பு தட்டிடும்" "உங்க அம்மா -அப்பாவுக்கு தெரியாம, அவங்களை ஏமாத்திட்டு கல்யாணம் பண்ணிக்காதீங்க. திரும்பி படுக்க முடியாம, பத்திய சாப்பாடு சாப்பிட்டுட்டு உங்களை வயித்தில் சுமந்தவ அம்மா. உங்களை பிரசவிக்கும் போது மரணத்தின் வாயிலை தொட்டு பார்த்தவ. அந்த தாய்க்கு சொல்லாமல் செய்யாதீர்கள்" "ஒரு ஆண் கல்யாணத்துக்கு அப்புறமாவது திருந்தணும். அவனை நம்பி ஒரு பெண் வந்த பிறகும் திருந்தலைன்னா உருப்படவே மாட்டான்" "அந்நியர்கள் நம் நாட்டை 26 முறை படை எடுத்துள்ளனர். ஆனால் நாம் எந்த நாட்டையும் ஒரு முறை கூட படை எடுத்ததில்லை. இதிலேயே தெரியும் நம் நாடு எவ்வளவு சிறப்பான நாடு என". "இந்தியாவில் 107 கோடி பேர் இருக்கோம். ஒருத்தர் முகம் மாதிரி இன்னொருவர் இருப்பதில்லை. டிவின்சுக்கு கூட சிறு வித்யாசம் இருக்கும் இயற்கையின் அதிசயம் இது தான்". "ஒரு காலத்தில் நம் சமூகத்தில் பெண் ஆதிக்கம் தான் இருந்தது. இயற்கையை எதிர்த்து போராடும் போது, புலியோடு சண்டை போடும் போது பெண்களை பின்னே தள்ளிட்டு வச்சிட்டான் ஆண்". "காந்தி, லிங்கன் மாதிரி நிறைய சாதிச்சவங்க அழகில்லாதவங்க தான். கண்ணதாசன் சொல்வார் அழகில்லாத உருவத்தை ஒதுக்காதீர்கள். அதற்குள்ளும் ஒரு ஆன்மா தவித்து கொண்டிருக்கிறது அழகான உருவத்தை வணங்காதீர்கள். அதற்குள்ளே ஆணவம் தலை தூக்கி நிற்கிறது பணக்காரன் வீட்டு வாசல் படி ஏறாதீர்கள். அங்கு உங்களுக்கு அவமானம் காத்து கொண்டிருக்கிறது !