book

கல்வியும் குழந்தைகளும்

Kalviyum Kulanthaigalum

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சேதுபதி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :164
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353822
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, ஒழுக்கம், பண்பு
Add to Cart

"கல்வியும் குழந்தைகளும்" என்னும் இந்நூலில் பேராசிரியர் சேதுபதி தம் சிந்தனைகள் பலவற்றைத் தொகுத்துத் தந்துள்ளார்.  குழந்தைகளை எங்ஙனம் வளர்க்க வேண்டும், எங்கனம் குழந்தை உள்ளத்தைப் பதப்படுத்த வேண்டும் - பக்குவப்படுத்த வேண்டும், ஊடகங்கள், நாளிதழ்கள் தாளிகைகள் போல்வனவற்றால் ஏற்படும் நன்மை தீமைகள் எனக் குழந்தைகளோடு தொடர்புடைய அனைத்தும் அலசி மிகக் கூர்மையாக ஆராயப்படுகின்றன.

மகாகவி பாரதி அடிக்கடி வருகிறார்.  அவர்மீது சேதுபதி கொண்டுள்ள ஆர்வமும், பாரதிக்கல்வியும் ஆங்காங்கு பளிச்சிடுகின்றன. உலக அறிஞர்களின் மேற்கோள்கள் பயனுடையவை.

குழந்தைகளின் உரிமைகள் பற்றி எழுதும்போது, சேதுபதி ஒரு வழக்குரைஞராகிறார்.  'குழந்தைகளுக்குச் சொல்லிக் காட்டுவன பயன்படா, நடந்து வாழ்ந்து காட்டுங்கள்' என்னும்போது ஆசானாகின்றார்;  'படிப்பு தண்டனையன்று - பிள்ளைச் செல்வங்களைச் சுமைதாங்கிகள் ஆக்காதீர்கள்' என்னும்போது கல்வி உளவியல் வல்லுநராகிறார்ந  தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்க் கல்வியும் தமிழ்வழிக்கல்வியுமே பயன்படுமென எடுத்துரைக்கும் பொழுது ஒரு நல்ல தாயாகிறார்.