book

கொங்கு நாட்டுப் பழமொழிகள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயா மீனாட்சி சுந்தரம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பழமொழிகள்
பக்கங்கள் :100
பதிப்பு :2
Published on :2006
Out of Stock
Add to Alert List

கொங்கு நாட்டின் முதற்குடி மக்கள் , பூர்விகக் குடிகள் ,மண்ணின் மைந்தர்கள் ,கொங்கு வேளாளர்கள்  தாம் வரலாற்று மூலங்களான சங்க இலக்கியங்கள் இதற்குச் சான்று கூறுகின்றன. சங்க இலக்கியங்கள் உண்மை நிகழ்ச்சிகள் வரலாற்று உண்மைகளை உள்ளது உள்ளவாறு படம் பிடித்துக்காட்டியுள்ளன . பதிற்றுப் பத்தும் புறநானூறும் வரலாற்று உண்மைகளை பெட்டகங்களாம். இலக்கியச் சுவையோடு வரலாற்று உண்மைகளை எடுத்துக் கூறுகின்றன. கல்வெட்டுகள் , பட்டயங்கள் , வரலாற்றை உண்மையாக உரைப்பனவாம் . கொங்கு வேளாளர்களின் உண்மையான வரலாற்றை உணர்த்துவதே இந்த நூலின் நோக்கமாகும். கற்பனையில் மிதக்காமல் உண்மையை நமது இனமக்கள் அறிய வேண்டும் கொங்கு வேளாளர்கள் கொங்கு நாட்டின் முதற்குடிமக்கள். தொல்காப்பியர் மொழிக்கே அன்றி மக்கள் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்துள்ளார் நமது மதிப்பிற்குரிய ஐயா , நா. மகாலிங்கம் அவர்களின் தொல்காப்பியர் காலம் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் என்கிறார் . மக்கள் வாழ்வியலுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது அதில் அதற்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர்கள் கொங்கு வேளாளர்கள் தாம். சங்க இலக்கியங்கள் எல்லாம் கொங்கு வேளாளர்களின் குடிஇயல் , வாழ்வியல்,வரலாற்று உண்மைகள் , உழைப்பு , பண்பாடு, அறிவியல், மருத்துவ அடிப்படையிலான சடங்குகள், குணவியல்புகள், ஆகியவற்றையெல்லாம் கூறுகின்றன.
                  "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்படுகிறது. ஐம்பதாண்டுகள் இலக்கண இலக்கியத்தை ஆய்வு செய்து உண்மை தெளிந்து அறிந்தவைகளை நமது இனமக்கள் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்படுகிறது .
      `உண்மையை உணர வைப்பது தான் வரலாறு `. என்ற அடிப்படையில இந்நூல் எழுதப்படுகிறது. இன்றைய செய்தி நாளைய வரலாறு. அன்றைய செய்தி இன்றைய வரலாறு.