book

நோய் நீக்கும் ஹோமியோபதி மருத்துவமுறை - ஆஸ்த்மா (காரணங்கள், தடுப்பு முறைகள், சிகிச்சைகள்)

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.சி. இராமகிருஷ்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788123418803
Add to Cart

கறுமவியாதி, எனக்கு வந்து கழுத்தறுக்கிறது" என பக்கத்துவீட்டு செல்லம்மா பாட்டி அங்கலாய்க்கிறாள்.
குளித்ததால் வந்ததா? முழுகியதால் வந்ததா எனக் காரணங்களைத் தேடி களைத்துப் போனார் எதிர்வீட்டு சலீம் நானா.
வாழைப்பழம், மோர், தயிர், வெண்டிக்காய் என ஒவ்வொன்றாகத் தவிர்த்து கடைசியாக இப்பொழுது சுட்டு ஆறிய நீரைத் தவிர வேறெதுவூம் சாப்பிட முடியாத பத்தியத்தில் திணறுகிறாள் மேரி.
சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து  இவர்கள் எல்லோரையும்  தொல்லைப்படுத்துவது இந்த ஆஸ்த்மா நோய்தான்.
இன்று பரவலாக உலகெங்கும் மனித இனத்தை தொல்லைக்கு உள்ளாக்கும் நோய்களில் முக்கியமானவற்றில் இதுவும் ஒன்று.
இழுப்பு, முட்டு, வீஸிங், ஆஸ்த்மா, தொய்வு, எனப் பலரும் தமது நோயை வெவ்வேறு பெயர்கள் கொடுத்து அழைத்தாலும் அடிப்படை நோய் ஒன்றுதான். ஆஸ்த்மா என்பது ஒரு கிரேக்கச் சொல்லாகும். அது மூச்சு வாங்குவதைக் குறிக்கும்.