book

அணு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஆர். ரகுநாதன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது. "அணு இயலின் தந்தை" என உலகத்தால் போற்றப்படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 1879-ம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். குழந்தை பருவத்தில் இருந்தே ஐன்ஸ்டீன் மந்த புத்தி உடையவராக விளங்கினார். அவர் மற்ற குழந்தைகளை போன்று ஓடியாடி விளையாட விரும்ப மாட்டார். சிறு வயதிலேயே பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். இவரது பேச்சுக்கள் குளறலாகவே வெளிப்படும். பள்ளியில் சேர்க்கப்பட்டாலும், ஒரு சிறைச்சாலை போன்றே இவருக்கு வகுப்பறை இருந்தது. இவர் மற்ற பாடங்களை வெறுத்தாலும் இவருக்கு கணிதம், பௌதிகத்தில் (Physics) அளப்பரிய ஆர்வம் ஏற்பட்டது. ஐன்ஸ்டீன் சிறுவயதில் இயந்திர மாதிரிகளையும் (model), இயந்திரக் கருவிகளையும் பொழுதுபோக்காகச் செய்துவந்தார். இவருடைய "பொருள் சக்தி மாற்றக் கோட்பாட்டு" – என்பதன் அடிப்படையில்தான் அணுகுண்டு தயாரிக்கப்படுகிறது. உலகில் இதுவரைக்கும் அறிவியல் விஞ்ஞானிகள் பல சமன்பாடுகளைத் தந்திருக்கிறார்கள். அதில், சார்பியல் கொள்கை (the Theory of Relativity), ராமன் விளைவு (Raman's Effect) போன்றவற்றை போல முக்கியமானது ஐன்ஸ்டீன் சொன்ன ஆற்றல் நிறை சமன்பாடு(E=MC^2). ”இது தெரியுமே” என்பவர்களிடம் விளக்கம் கேட்டால் யோசிக்கத்தான் செய்வார்கள்.