book

சாமி வணக்கமுங்க

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்யா சாகர்
பதிப்பகம் :லியோ புக் பப்ளிஷர்ஸ்
Publisher :Lio Book Publishers
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

நெடு நாளாய் நெஞ்சை நெருடிய நிதர்சனங்கள் எல்லாம் சொற்களாய் உதிர்வதால்.. மனம் ஒரு சுகானுபவத்தில் திளைக்கிறது.  "அவனவன் கடமைதான் கடவுள்ளால் இடப்பட்ட கட்டளை" "மனிதனை விடப் பெரிதில்லை மதம்" - என்பன போன்ற திருவார்த்தைகளைப் படிக்கும்போது "பலே பாண்டியா" - என்று பாராட்டத் தோன்றுகிறது.

நான் யார்?  என் உள்ளம் யார்?  ஞானங்கள் ஆர்?" என்ற நம் மகான்களும் மகரிஷிகளும் தன்னைக் கடைந்து தன்னைக் கடந்து, தனக்குள் இருக்கும் தானைக் கண்டு பிடிக்க முற்பட்ட அற்புதங்களை எளிமைப் படுத்த முயன்று - ஏராளமாக ஜெயித்திருக்கிறார் வித்யாசகர்.

முதல் இரண்டு கதைகளிலும், பிரச்சார நெடி தூக்கலாக இருக்கிறது.  மூன்றாவது கதையில் பாத்திரங்களில் எதார்த்தமான உரையாடலால் பிரச்சாரமே அழகாகி.. நம்மை அவ்வப்போது அசைபோட வைக்கிறது.