முல்லைப் பாட்டு
Mullai Pattu
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மறைமலை அடிகள்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :92
பதிப்பு :6
Published on :2006
Add to Cartமுல்லைப்பாட்டு என்பதைப் பற்றித் தெரிய வெண்டுவன எல்லாம் ஆராயும்முன், பாட்டு என்பது எத்தன்மையது? என்று ஆராய்ந்து அறிந்துகொள்ளல் வேண்டும். பின்றைக் காலத்துத் தமிழ்ப் புலவர் பாட்டென்பது இன்னதென்றே அறியாராய்ப் புதுப்புது முறையாற் சொற்களைக் கோத்துப் பொருள் ஆழமின்றிச் செய்யுள் இயற்றுகின்றார். பண்டைக் காலத்துக் தண்டமிழ்ப் புலவரோ பாட்டு என்பதன் இயல்பை நன்கறிந்து நலமுடைய செய்யுட்கள் பலப்பல இயற்றினார். இங்ஙனம் முற்காலத்தாராற் செய்யப்பட்ட பாட்டின் இயல்பொடு மாறுபட்டுப் பிற்காலத்தார் உண்மை பிறழ்ந்து பாடிய செய்யுட்களைக் கண்டு மாணாக்கர் பாட்டினியல்பு அறியாது மயங்குவராகலிற் பாட்டு என்பது இன்ன தென்பதனை ஒரு சிறிது விளக்குவாம்.