book

முஸோலினி

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. சாமிநாத சர்மா
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :134
பதிப்பு :4
Published on :2009
ISBN :9789380219158
Add to Cart

முஸோலினி எழுதிய நாடகங்களுள் ஒன்றன் தலைப்புப் பெயர் இது. ஆனால், உண்மையிலேயே, சென்ற சில வருஷங் களாகத் தமிழ்நாட்டின் இதிகாச மறுமலர்ச்சிகனவான்களே ஆரம்பமாகிறதல்லவா இதற்காகவே, முகவுரையென்று சம்பிரதாயமாகச் சொல்லப்படும் இந்தப் பாகத்திற்கு மேற்படி தலைப்பு கொடுக்கப்பெற்றிருக்கிறது. சம்பிரதாயங்களை மீறிச் செல்வதிலே எனக்கு ஓர் ஆசை. ஏன் இடறிவிழுந்தாவது அநுபவம் பெறலாமேயென்ற எண்ணந்தான்.
முஸோலினி ஒரு சரித்திர புருஷன். வேற்றுமைகளினால் அரிக்கப்பெற்றும், சோர்வினால் உறங்கியும் கிடந்த ஒரு சமூகத் திற்குத் தன்மதிப்பு, கடமை, ஒழுங்கு, ஒழுக்கம் ஆகிய மருந்து களை உட்புகுத்தி, அதனைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்ததோடு, மற்றச் சமூகங்களுக்கு எதிரே தோள் தட்டவும் செய்வித்தவன், ஒரு சரித்திர புருஷனாக அல்லாது வேறு எவ்விதமாக இருக்க முடியும்
முஸோலினியின் பேச்சுக்கள், எழுத்துக்கள், அவனுடைய நெருங்கிய நண்பர்கள் எழுதியுள்ள நூல்கள் முதலியவற்றின் துணைகொண்டு முஸோலினியை, பின்வரும் பக்கங்களில் ஒருவாறு படம்பிடித்துக் காட்டியிருக்கிறேன். படம் பிடிக்கும் போது தளர்ச்சியின் காரணமாக எனது எழுதுகோல் 'காமிரா' சிறிது அசைந்து கொடுத்திருக்கலாமோ என்னவோ.