
நீ நீயாக இரு
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தஞ்சை வசந்தலெட்சுமி
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789389968873
Out of StockAdd to Alert List
'' நீ நீயாக இரு''.
இது ஆசிரியர் வசந்தலெட்சுமி அவர்களுக்கு எட்டாவது நூலாகும். இதற்கு முன் இவர் எழுதியுள்ள '' குரோமோசோம் பூக்கள்'', என்ற திருநங்கைகள் வாழ்வியல் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்ட குறு நாவலை நான் படித்துள்ளேன். மேற்படி நூலை விட இந்நூலில் திருநங்கைகள் படும் இன்னல்களை மிக அதிகமாகவே கோடிட்டு காட்டியுள்ளார் ஆசிரியர் வசந்தலெட்சுமி.
திருநங்கைகள் என்போர் பிறப்பால் ஆணின் அடையாளத்தோடு பிறந்து, மனதளவில் பெண்ணாக வாழ்பவர்கள். இவ்வாறு பிறந்தது இவர்களின் குற்றமல்ல. தாயின் வயிற்றில் கருவாக தரிக்கும் போதே X மற்றும் Y குரோமோசோம் பிரச்சனைகளால் தான் இவர்கள் மூன்றாம் பாலினமாக உருவாகின்றனர்.
இவ்வாறு பிறந்த இவர்களை சொந்தக் குடும்பமும் ஏற்றுக் கொள்வதில்லை. சமூகமும் ஏற்றுக் கொள்வதில்லை. சராசரி மனித வாழ்வின் அனைத்து உரிமைகளும் கிடைக்கப் பெறாத இவர்கள் மிகவும் பாவப்பட்டவர்களே. தங்களின் வாழ்வாதாரத்திற்கு வேலை வாய்ப்பு ஏதுமின்றி யாசகம் மற்றும் விபச்சாரத்துக்கு இவர்கள் தள்ளப்படுவது காலத்தின் கொடுமையாகும்.
இந்நூலில் திருநங்கைகள் படும் வாழ்வியல் துயரங்களையும், இச்சமூகம் அவர்களுக்கு இழைக்கும் கொடூரங்களையும், ஆசிரியர் வசந்தலெட்சுமி மிக அழகாக பதிவு செய்துள்ளார். இதில் உள்ள இரு கதைகளுமே நம் தமிழ்நாட்டில் நம்முடன் தற்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் திருநங்கைகள் இருவரது உண்மைக் கதைகளே.
