book

வீரனின் விழிகள் (பாகம் - 1)

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஹரிஷ் பிரபாகரன்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789389968415
Add to Cart

ஒரு தலைவனை கோடான கோடி மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட என்ன காரணமாக இருக்கும்? இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் சுதந்திரப் போராளிகளின் மூச்சுக்காற்றாக திகழ்ந்தவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்! அவருடைய வீர வரலாற்றை விறுவிறுப்புடன் கூறும் பிரம்மாண்ட புதினம் இது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி இதுவரை பல மொழிகளில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அதில் பெரும்பாலானவை அவரைப் பற்றி வெளியான கட்டுரைகளே ஆகும். அவரைப் பற்றிய புதினங்கள் இதுவரை வெளியாகியிருக்கிறதா என்று கேட்டால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு தான் விடை கிடைக்கும். அதுவும் தமிழ் மொழியில் இந்த மாவீரரை பற்றிய புதினங்கள் வெளியாகியிருக்குமா என்பது சந்தேகமே! தமிழ் மக்கள் அதிகம் நேசிக்கும் ஒரு தேசிய தலைவனை தமிழ் மொழியில் பூஜிக்கும் புதினம் இது. நேதாஜியின் வீரம், அறம், தேசபக்தி, சமூக சிந்தனை, போற்குணம், காதல், பேசப்படாத அவரின் மறுபக்கங்கள். சுந்தரப் போராட்டத்தில் அவரது பங்கு, அவரது திட்டம், அவரது செயல்பாடுகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய நூல் இது! சுருங்கச் சொல்லப் போனால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை கதாநாயகனாக கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட ("வீரனின் விழிகள் (பாகம் - 1)") ஒரு திரைப்படம் இது! அப்படி ஒரு பாணியில் இக்கதைக்களம் அமைந்திருக்கிறது! அவரை நேசிப்பவர்களும் வாசகர்களும் இந்நூலினை நிச்சயம் விரும்புவர்! அவரது பொதுவான வாழ்க்கை வரலாற்றுடன் இன்னும் பெரும் வரலாறுகளை உங்களுக்கு வழங்க காத்திருக்கிறது இந்த புதினம்.