
உச்சி நிலா - திகில் காலம் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)
₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :242
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789390771813
Out of StockAdd to Alert List
இந்த கதை 2007 ஆம் ஆண்டு க்ரைம் நாவல் என்ற இதழில் வெளிவந்தது.
அமைச்சர் தாமரைக் கண்ணன் ஷிவாஸ் ரீகல் ஸ்காட்ச்சையும், நெய்யில் பொரித்த பெப்பர் சிக்கனையும் வயிற்றுக்கு அனுப்பிவிட்டு... தன் மெகா சைஸ் தொப்பியைத் தடவியபடி எதிரில் நின்றிருந்த பி.ஏவைப் பார்த்தார்.
'' கிருஷ்ணன்!''
''ஸார்...''
''மணி என்ன?''
''பத்தே முக்கால் ஸார்!''
''நான் இனியாவது தூங்கப் போகலாமா?''
''ஸ...ஸார்...அது வந்து...''
''என்னய்யா?''
''பதினோரு மணிக்கு மிஸ்டர் அனந்தராமனுக்கு அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருக்கீங்க..!''
