book

விடியாத இரவொன்று வேண்டும் - வாடகை தேவதை (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

₹330+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :281
பதிப்பு :1
Published on :2024
ISBN :9789390771943
Add to Cart

இந்த கதை 1995 ஆம் ஆண்டு பாக்யா என்ற இதழில் வெளிவந்தது.

முதலிரவு அறை பூக்களின் வாசத்தில் நிரம்பியிருக்க சம்யுக்தா, வல்லப் மார்பில் சாய்ந்திருந்தாள். காலையில் கட்டிய புதுத்தாலி அக்மார்க் முத்திரையோடு அவள் கழுத்தில் இடம்பிடித்து இருந்தது. வலது கையின் ஆட்காட்டி விரலால் வல்லபின், சர்ட் பட்டனை நிரடிக் கொண்டிருக்க, சம்யுக்தா கொஞ்சலாய் கூப்பிட்டாள்.
''என்னங்க!''
''ம்...''
''உங்களுக்கு 'வல்லப்'னு பேர் வைக்க ஏதாவது காரணம் இருக்கா...?''
''இருக்கு...''
''என்ன...?''
'' என்னோட தாத்தா ஒரு சுதந்திர போராட்ட தியாகி. அவருக்கு பிடிச்ச  தலைவர் வல்லபாய் பட்டேல். அவர் பிறந்த தேதியில நானும் பிறந்ததாலே எனக்கு வல்லப்னு பேர் வைச்சுட்டாங்க... ஏன் உனக்கு அந்த பேர் பிடிக்கலையா...?''