book

கண்ணை நம்பாதே - தலை இல்லாத சிலை (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :195
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789390771424
Add to Cart

'' அகில்....'' லார்ஜை விழுங்கிட்டு போதையோடு கூப்பிட்டான் டேனியல்.
''ம்....''
''நான் கிளம்பட்டுமா..?''
'' மணி எவ்வளவு டேனி...?''
''பனிரெண்டாகப் போகுது....''
''இப்பத்தான் பார்ட்டிக்கு வந்து பாட்டிலைத் தொட்ட மாதிரி இருக்கு. அதுக்குள்ளே மணி பனிரெண்டாகப் போகுதா...?
டேனியேல் சிரித்தான். '' இது மாதிரியான பார்ட்டிஸ்க்கு வந்தாலே இப்படித்தான் நேரம் பறக்கும்.''
''சரி, நான் கிளம்பறேன் டேனி. ஓய்ஃப் வீட்ல எனக்காக தூங்காமே வெயிட் பண்ணிட்ருப்பா.''
''நீ உன்னோட ஒய்ஃபுக்கு ரொம்பவும் பயப்படறே, அகில்....''
'' அது பயம் கிடையாது. பயப்படற மாதிரி ஒரு பாவ்லா. அவ்வளவுதான்.''