book

திராவிடம் அரசியலும்...! அவதூறும்...!

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெற்றிச்செல்வன்
பதிப்பகம் :கருஞ்சட்டைப் பதிப்பகம்
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

செருப்பு ஒன்று வீசினால், சிலை ஒன்று கிடைக்கும் என்று சொன்னார் கவிஞர் கருணாநத்தம். அவதூறுகளை வீசினால், ஆணித்தரமான நூல் ஒன்று கிடைக்கும் என்கிறேன் நான். இதுவே திராவிட இயக்கத்தின் பண்பாடு! இவ்வாறு பேசியது வேறு யாரும் அல்லர், நமது மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்தான். எழுத்தாளர் திருமாவேலன் அவர்களின் இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? நூல் வெளியீட்டு விழாவில்தான் இவ்வாறு பேசினார் நமது முதல்வர். இதோ திராவிடம். அரசியலும் அவதூறும் நூல் உங்கள் கரங்களில்! திராவிட இயக்கத்திற்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்தத் தனிச்சிறப்ப என்பது, வரலாற்றைப் பெருமையுடன் நினைவுகூர்வது. இந்தியாவில் வேறெந்த இயக்கத்திற்கும் இல்லாத வரலாற்றுப் பெருமிதம் திராவிட இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. இதை உணர்ந்தே திராவிடத்தை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று நமது எதிரிகள்  கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களது முயற்சிகளில் ஒன்றுதான், அவதூற்றுச் சேறை அள்ளி வீசுவது.