
கணினி இணையத் தமிழ்
₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் த. ரெஜித்குமார்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :252
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788123446127
Out of StockAdd to Alert List
தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ப தம்மை தகவமைத்துக் கொண்டே வருகிறது என்று கூறலாம். அதற்குக் காரணம் ‘இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’ என்று பாரதியார் கூறியது போன்று நவீன கால கண்டுபிடிப்புகளை செய்திகளை மற்றும் மாற்றங்களை ஆய்வாளர்கள் தமிழில் வெளிப்படுத்தி வருகின்றமையே ஆகும்.
இன்று கணினி மற்றும் இணையம் இரண்டும் மக்களோடு இரண்டறக் கலந்திருந்தாலும் அவை குறித்த நூல்கள் மிகக்குறைவாகவே தமிழில் வெளி வந்துள்ளமைக் காணமுடிகிறது.
இந்தச் சூழலில் மாணவர்களுக்கு கணினி இணையம் குறித்த அறிவியல் எண்ணங்களை சிந்தனைகளை தமிழில் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ்ப் பேராசிரியரும் என்னுடைய ஆய்வு மாணாக்கருமான முனைவர் த. ரெஜித்குமார் அவர்களின் அயராத முயற்சியின் காரணமாக கணினி இணையத் தமிழ் என்னும் இந்நூல் வெளிவருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
