ஒ.என்.வி. குருப்பின் சில கவிதைகள்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.எம். சாலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123431680
Add to Cartமத்திய அரசு பணிநிமித்தம் ஏ.எம்.சாலனின் வாழ்வு புகழ்பெற்ற கொச்சி மாநகரில் நங்கூர மிட்டது. தன் கடைசிக்காலம் வரையிலும் அவர் கொச்சிவாசியாகவே வாழ்ந்தும் வந்தார். ஆனாலும் ஆரல்வாய்மொழி தொப்புள்கொடி உறவுக்கும் உண்மையாகவே இருந்தும் வந்தார். அவருடைய பெரும்பாலான இலக்கியப்பணிகள் அவருடைய கொச்சி வாழ்க்கையில் பூத்த மலர்களே. “வட்டத்தை மீறிய விரிவுகள்,” “அழுக்கு,” “ஒதுக்கப்பட்டவர்கள்” என்னும் சிறுகதைத் தொகுப்புக்களும், “படைப்பு, படைப்பாளி, விமர்சனம்,” “தலித் பண்பாடு சில பார்வைகள்” என்னும் கட்டுரைத் தொகுப்புக்களும், “ஓ.என்.வி. குருப்பின் சில கவிதைகள்,” “தேர்ந்தெடுத்த மலையாள சிறுகதைகள்,” “விளம்பர உலகம்,” “கானலில் நீர் தேடிய மான்கள்,” பி.கே.வாசுதேவன் நாயரின் “எனது வாழ்க்கைப் பயணம்” என்னும் மொழியாக்க நூல்களும் ஏ.எம்.சாலன் என்னும் படைப்பாளியின் பன்முகங்களுக்கு அடையாளங் களாகத் திகழ்கின்றன.