book

கம்ப்யூட்டர் A to Z

Computer A To Z

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. புவனேஸ்வரி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :200
பதிப்பு :14
Published on :2016
ISBN :9788184761825
குறிச்சொற்கள் :கணிபொறி, மென்பொருள், நிறுவனம், தொழில்
Add to Cart

பத்து கைகள் இருந்தாலும் சாத்தியப்படாத வேலைகளை, நிமிடங்களில் முடித்துத் தரக்கூடிய கம்ப்யூட்டர் இன்றைய அவசர யுகத்தில் ஒரு வரப்பிரசாதம். ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட்டில் ஆரம்பித்து, இன்று நமது அன்றாடத் தேவைகள் பலவற்றைக் கண் மூடித் திறக்கும் நேரத்தில் கச்சிதமாகச் செய்து முடித்துக் கொடுக்கும் ஆற்றல் கம்ப்யூட்டருக்கு உண்டு. சட்டைப் பையிலேயே ‘பாக்கெட் அளவு கம்ப்யூட்டர்’ வைத்திருக்கும் காலம் இது. சூரியனைப் பற்றியும் சூரியனுக்குக் கீழுள்ள அத்தனை விஷயங்கள் பற்றியும் படிக்க, படங்களாகப் பார்க்க, படித்ததையும் பார்த்ததையும் சேமித்து வைக்க, புதிய டிஸைன்களை உருவாக்க, கடிதங்கள் எழுத, வர்த்தக தொடர்பு கொள்ள... இப்படி நம் வாழ்க்கைக்குக் கூடுதலான வசதிப் பெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு என்பது அத்தியாவசியத் தேவை. இந்த அவசியம் கருதித்தான் கம்ப்யூட்டர் பற்றி 'ஏ டூ இஸட்' விஷயங்களை விளக்கி, மிகவும் எளிமையாக இந்த நூலில் கொடுத்திருக்கிறார் காம்கேர் கே.புவனேஸ்வரி. கம்ப்யூட்டரின் ஒவ்வொரு பாகத்தையும் விளக்கிச் சொல்லியிருப்பது மட்டுமல்லாமல், அதன் பயன்பாடுகள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் இழைத்துக் கொடுத்துள்ளார். பத்து விரல்களால் எழுதும் முறை என்பதுதான் கம்ப்யூட்டரில் எழுதும் முறை. குழந்தைகள் ஆரம்பக்கல்வி கற்பதுபோல், இந்த நூலின் உதவியோடு கம்ப்யூட்டரின் நுட்பத்தை அரிச்சுவடியிலிருந்து எளிதாகக் கற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் மற்றவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லவும் இந்நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அலுவலகம் செல்வோர், பெண்கள், முதியோர்... இப்படி அனைத்துப் பிரிவினருக்கும் பயன்படும் விதத்தில், மல்டி மீடியா புத்தகம் போல படங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளதே இந்நூலின் சிறப்பம்சம். கற்றுக்கொள்ளுங்கள்... நீங்கள்தான் சூப்பர் கம்ப்யூட்டர்!