பெண்ணிய வாசிப்புகள்
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. ராமசாமி
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2024
Out of StockAdd to Alert List
தமிழ்ச் சிறுகதை வடிவத்தில் பங்களித்து வந்துள்ள/ வரும் 26 பெண்களின் கதைகள் வாசித்து விவாதிக்கப்பட்டுள்ளன. 26 பேரில் இந்திய/ தமிழ்நாட்டுப் பெண் எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் இலங்கை/புலம்பெயர்ப் பெண் எழுத்தாளர்களும் (தமிழ்க்கவி, தமிழ்நதி, லறீனா,மஜீதா, கறுப்பு சுமதி, ஈழவாணி, பிரமிளா பிரதீபன்) சிங்கப்பூர்ப் பெண் எழுத்தாளர்களும் (ஹேமா, அழகுநிலா, சுஜா செல்லப்பன் ), மலேசியா எழுத்தாளரும் (பாவை) கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளனர். சமகாலத்தமிழ் இலக்கியம் உலகத்தமிழ் இலக்கியப்பரப்பாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் நோக்கம் அதன் பின்னணியில் உள்ளது. பெண் எழுத்துகளை வாசித்து விவாதிக்கும் திறனாய்வுப்பார்வையை – பெண்ணியத்திறனாய்வு அணுகுமுறையைத் தமிழில் வளர்த்தெடுக்கும் பணியை இக்கட்டுரைகள் செய்யும் என்ற நம்பிக்கையோடு எழுதப்பட்ட பெண்களையும் எழுதும் பெண்களையும் இந்நூலில் வாசிக்கலாம். சிறுகதைகளைப் பெண்ணிய நோக்கில் வாசித்து விவாதித்துள்ள இக்கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வாசிக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு கட்டுரையையும் தனித்தனியாகவே வாசிக்கலாம். விவாதிக்கப்படும் கதைகளை இதுவரை வாசித்திருக்கவில்லை என்றால், தேடி வாசிக்கத்தூண்டும்.ஏற்கெனவே வாசித்திருந்தால் உங்களின் கதை வாசிப்பை உரசிப்பார்த்துக் கொள்ளத் தூண்டுவதன் மூலம் திறனாய்வு மனநிலையை உருவாக்கும்.