book

கழுகு நிலம் - துரோகம் துரத்தும் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபா
பதிப்பகம் :தங்க தாமரை பதிப்பகம்
Publisher :Thanga Thamarai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

கழுகு நிலம் ராணுவப் பின்னணியில் சாகசங்கள் நிறைந்த காதல் நாவல். அன்றைக்கு ஒரு நாள் மட்டும், போனால் போகிறதென்று தேவதை வானில் இருந்து இறங்கி வந்து அவன் அபார்ட்மென்டில் நுழைந்து வரம் வழங்கிவிட்டுப் போன மாதிரி ஒரே ஒரு தடவை வந்த அதே சுபத்ரா. அதற்குப் பின் வெறும் மௌனப்புன்னகை மட்டும் சிந்திய சுபத்ரா. அவள் வராததாலேயே அவள் தன்னை வெகுவாகக் கவர்கிறாள் என்று அவனுக்குத் தோன்றும். வானத்து நிலவு மீதும், நட்சத்திரங்கள் மீதும் மனிதர்களுக்கு ஏன் அவ்வளவு காதல் என்று சுல் தானுக்கு அப்போதுதான் புரிந்தது. அவை எப்போதும் மனிதனுக்கு அகப்படுவதே இல்லை. தூரத்தில் இருந்தே கண் சிமிட்டுகின்றன. அழைக்கின்றன. ********** துரோகம் துரத்தும் க்ரைமும் சென்டிமெண்ட்டும் பின்னிப் பிணைந்த த்ரில்லர். "எத்தனை தடவை அதே கேள்விகளைக் கேட்டு என் குழந்தையை அவமானப்படுத்துகிறார்கள்!" அபிராமியின் அம்மா சூடானாள். "இதற்கு பயந்துதானம்மா பாதி பெண் குழந்தைகள் போலீஸ் வரை வருவதே இல்லை.. ஆனால் திமிர் பிடித்த அமுதனை அப்படி விடக்கூடாது. அபிராமியின் தைரியத்தை நான் ரொம்பப் பாராட்டுகிறேன்.." "அந்த அமுதனுக்காக வாதாடுகிறாளே.. அவளுக் குக் கூட இருபத்தைந்து இருபத்தாறு வயதுதானே இருக்கும்? ஒரு பெண்ணாக இருந்துகொண்டு எப்ப டித்தான் அவளால் அபிராமியைப் பந்தாட முடிகிறதோ?" "தொழில் அம்மா! அந்தப் பெண் ரொம்ப சூட்டிகை யான பெண். அபாரமாக வரப்போகிறது.."