மேற்கு ஆசியா 1800-1970
₹39+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் இராம. வேலாயுதம்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :231
பதிப்பு :4
Published on :2003
Add to Cartநவீன காலத்தில் ஈரான் என்று அழைக்கப்படும் பாரசீகம் தென்மேற்கு ஆசியாவில் கடல் மட்டத்திலிருந்து 3000 அடி முதல் 5000 அடி உயரத்தில் அமைந்துள்ள பீடபூமியாகும். ஒழுங்கற்ற நீண்ட சதுரமான இது 6,28,000 சதுர மைல் பரப்புள்ளது. பெரும்பகுதி பாலையும் ஸ்டெப்பி புல்வெளியுமாகும். 6 விழுக்காடே விவசாயத்துக் கேற்றது; ஆனால், எண்ணெய் வளமிகுந்தது. உலக எண்ணெய் உற்பத்தியில் 6 விழுக்காடு இங்கே கிடைக்கிறது. புவியியல் அமைப்பில் இது கிழக்கு ஆசியாவுக்கும் ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளுக்குமிடையே ஓர் இணைப்பாக அல்லது ஒரு சந்திப்பாக விளங்குகிறது. வழித்தடங்கள் கண்டுபிடிக்கப்படுமுன்பு, தூரக்கிழக்கு நாடுக்களுக்கும் மேலை நாடுகளுக்கும் வடக்குப் பாரசீகம் வழியாகவே முக்கிய வாணிப வழித் தடமிருந்தது.