book

பாரதியார் கவிதைகள் தேசிய கீதங்கள்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். விஜய பாரதி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :236
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

''பாரதியின் கவிதைகள் எளிமையானவை; அவர் தம் கவிதைகளில் பயிலும் சொற்கள், மக்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும் சொற்கள்; அவருடைய நடை எளிமை வாய்ந்தது; அவர் கையாளும் சந்தங்கள் மக்கள் பெரும்பாலும் கேட்டுப் பழகிய சந்தங்கள். ஆகவே பாரதியைப் படிப்பதென்பது அத்தனை சிரமமான காரியமன்று,'' என்று சிலர் நினைக்கக் கூடும். பாரதி புதுயுகத்தைச் சார்ந்தவர். ''பேசுவது போலவே எழுத வேண்டும்,''என்ற கொள்கை உடையவர். ''எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக் கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு,'' இவற்றில் பாடல்களை அமைப்பதில் ஆர்வம் கொண்டவர். இதனால் அவருடைய கவிதைகள் கவிதையிற் பயிற்சி உடையவருக்கேயன்றி, சாதாரண ஜனங்களுக்கும் எட்டக்கூடிய தன்மையுடையவாய் அமைந்திருக்கின்றன. எனினும் பாரதியின் கவிதைகளில் அமைந்த ஆழமும், விரிவும், கவிஞனின் ஆளுமையும், உள்ளுணர்வும் எல்லாருக்குமே எளிதில் புலப்பட்டுவிடக் கூடியவையல்ல.