book

கேப்டன் மகள்

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூ. சோமசுந்தரம், அலெக்சாந்தர் புஷ்கின்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

பூஷ்கின் 1830ம் வருடத்திலிருந்தே யெமெல்யான் புகச்சோவ் (1744-1775) தலைமையில் நடைபெற்ற விவசாயிகளின் கலகத்தைப் பற்றி அதிகமான அக்கறை கொண்டிருந்தார். இந்தக் கலகத்தைச் சேர்ந்து புகச்சோவுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்த ஒரு கனவானின் வாழ்க்கையைப் பற்றி நாவல் எழுதுவதென்று முடிவு செய்தார். 1833 ஜனவரி மாதத்தில் இந்த நாவலின் ஆரம்ப உருவரையைப் பூஷ்கின் தயாரித்தார். அதில் ஒரு படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரி மிஹயீல் அலேக்சாந்தரவிச் ஷ்வானிவிச் என்ற உண்மையான நபர் கதாநாயகராக இருந்தார். கலகம் பரவிய எல்லா இடங்களுக்கும் பூஷ்கின் சென்று அதை நேரில் கண்டவர்களைச் சந்தித்துப் பேசினார். "காப்டன் மகள்" என்ற சரித்திர நாவலின் ஆரம்ப உருவரை பிறகு கணிசமான மாற்றமடைந்தது. நாவலில் விவசாயிகள் கலகம் மென்மேலும் அதிக முக்கியத்துவம் பெற்றது. கதாநாயகனுக்கும் காப்டன் மகளுக்கும் இடையே வளரும் காதல், கதையின் கரு. அழுத்தமாக உருப்பெற்றது.