book

நீ எந்தன் சுவாசமாய்

Nee Enthan Swasamai

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ஜோவிதா
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

தன் சுவாசமாய் அடிக்க வேண்டியது... பிறகு காலையில் எழுந்து, 'மீனா, டிபன் ரெடியா? மீனா, இந்த டையை எங்கே வைச்சே...? அது எங்கே ? இது எங்கே ?' ன்னு என் உயிரை வாங்குறது. அப்படி என்னதான் அரட்டையோ?" பொரிந்து கொட்டினாள் மீனாட்சி என்கிற மீனா. சிதம்பரத்தின் ஆசைக் காதல் மனைவி. அவளையே பார்த்துக் கொண்டிருந் தவர், கொஞ்சம் சீண்டிப் பார்ப்போம் என எண்ணியவராய், "நீ ஏன்டி அலுத்துக்கறே... ? உன்னைப்போலன்னு நினைச்சியா எங்களை...? என் பொண்ணு அதிபுத்தி சாலிடி... தெரியாத விஷயமே இல்லேடி... அவ காலேஜிலிருந்து உலகம் வரையும் தெரிஞ்சு வைச்சுருக்கா. நான் என்னோட பிசினஸைப் பத்தி அவகிட்டே பேசுவேன். எனக்கே ஐடியா தருவான்னா பாத்துக்கோயேன்... அவ காலேஜ்ஜிலிருந்து கார்ல் மார்க்ஸ் வரை என்கிட்டே பேசுவா... இப்படி எத்தனையோ இருக்கு. உனக்கெங்கே புரியப்போகுது...? நீதான் அடுக்களையும், கோயிலும், பூஜை புனஸ்காரமுமாகத் திரியுறே... போடி போ, போய் வேலையைப் பாரு. நான் ஆபீஸ் கிளம்பணும்..." என மனைவியை விரட்டினார். "ஹும்... இதுக்கொண்ணும் குறைச்சலில்லை...!" முணுமுணுத்தபடி நகர்ந்தாள் மீனாட்சி. சிதம்பரம் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறந்த தொழிலதிபர்களில் ஒருவர், நேர்மையின் மறு வடிவம், உழைப்பின் சிகரம், சிறு வயதிலிருந்து வறுமை என்றால் என்ன என்று தெரிந்த குடும்பத்தில் பிறந்த தால் என்னவோ எதிலும் அதிகம் ஆசை வைக்காதவர்.