
அயற்சொல் அகரமுதலி
₹550
எழுத்தாளர் :நெல்லை க. சித்திக்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :தமிழ் அகராதி
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395442794
Out of StockAdd to Alert List
என்னுடைய நண்பர் சித்திக் இடையறாது உழைத்து உருவாக்கியது இந்த அகராதி. சிகரம் என்ற சொல்லை யாவரும் அறிவோம். அது சமற்கிருதம் என்பதை அறிவோமா? பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுபோல நாம் வழக்கத்தில் தமிழென எண்ணிப் பேசும், ஏறத்தாழப் பதினெட்டாயிரம் சொற்களுக்குத் தனித்தமிழ்ச் சொற்களை அகரவரிசைப்படுத்தித் தந்திருக்கிறார் சித்திக். காலத்திற்கேற்ற அவசியமான அகராதி இது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையிலும் ஆக்சிஜன் என்று சொல்லாமல் உயிர்வளி என்று தமிழால் மூச்சுவிட்ட என் நண்பரின் தீராத்தாகம் இந்நூலால் தணியக்கூடும். இந்நூலின் துணையால் தணியாது வளரட்டும் தமிழின் ஆக்கம்!
