book

சொற்களால் ஒரு சுதந்திரப்போர்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆரூர் புதியவன்
பதிப்பகம் :எதிரொலி பதிப்பகம்
Publisher :Ethiroli Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

ஒரு கோடி வானம்பாடிகள் உள்ளே
பழநிபாரதி

“சொல் என்பது மிகவும் சூட்சுமமானது; அரூபமானது ஆனால் அது ஏற்படுத்தும் பாதிப்பை எந்தப் பருப்பொருளும் எனக்கு ஏற்படுத்துவது கிடையாது” என்றார் ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைத்த இன்குலாப்.
கவிஞர் இன்குலாப் இயற்கையையும் மனிதத்தையும் இணைத்த ஒரு மாபெரும் கவிதைச் சங்கிலி. நீளும் அந்தச் சங்கிலியின் ஒரு கண்ணியாகத்தான் ஆரூர் புதியவனை நான் அடையாளம் காண்கின்றேன்.
பசித்த மக்களுக்கு மிட்டாய் கொடுத்து... ஆயுதங்களை அணிவகுத்துக் கொண்டாடுவதுதான் குடியரசு என்கிற ஆதிக்க அரசியலுக்கு எதிராக & சாதி, மத, அநீதிக்கு எதிராக ஆரூர் புதியவன், சொற்களால் ஒரு சுதந்திரப் போரைப் பிரகடனப்படுத்தி இருக்கிறார்.
புறாக்களைப் பறக்கவிட்டுப் புலிகளைக் கொல்லுகிற பேரரசின் துரோகத்தைத் தோலுரித்துக் காட்டுகிற கவிதைகள் இவை.
தமிழில் ஆயுத எழுத்து உண்டு; தமிழே அறம் காக்கும் ஆகப்பெரும் ஆயுதம் என்கிற வீறார்ந்த நடையில் ஆரூர் புதியவன் ஒளியை நோக்கி நடக்கிறார்...
மஹ்மூத் தர்வீஷின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் &
“போரிடும் எனது பாடலைப் பாட
என்னுள் ஒரு கோடி
வானம்பாடிகள் உள்ளன.”
என்கிற பெருமிதத்தோடு.