book

வேத விளக்கமே மூவர் தேவாரம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. கமலக்கண்ணன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

இதி) பக்தி என்று கூறப்படுகிறது." - விவேக சூடாமணி 31
 
ஆதிசங்கரரை அடுத்து மீண்டும் அப்பரடிகள் இவ்வாறு கூறுகிறார்: 
 
தேடிக் கண்டு கொண்டேன் 
திருமாலொடு நான்முகனும் 
தேடித் தேடொணாத் தேவனை - என்னுளே 
தேடிக் கண்டு கொண்டேன். - அப்பர் 4 / திருஅங்கமாலை பண்: சாதாரி - 12
 
இப்போது நம் முன் நிற்பவர் அவ்வை மூதாட்டி அவர் என்ன சொல்கிறார் என்று கேட்போம்:
 
உடம்பினைப் பெட்ரா பயனாவ தெல்லாம் 
உடம்பினில் உத்தமனைக் காண் - அவ்வைக் குறள்  - 11
 
மனிதராய்ப் பிறந்தோர் அனைவரும் உடம்புக்குள்ளே இறைவனைக் காண வேண்டுமா? இதுவரை யாரும் இவ்வாறு கூறவில்லையே என்று திகைத்து நிற்கிறோம்.
 
இப்போது மீண்டும் ஆதிசங்கரர் தோன்றி வேத விளக்கம் கூறுவதைக் கேட்போம்:
 
1."எப்படியோ அடைதற்கரிய மனிதப்  பிறவியையும் அதிலும் ஆண் பிறவியையும், வேதத்தின் உட்கருத்தையும் அறிந்து, எவனொருவன் தன்னுடைய முத்தியின் பொருட்டு முயற்சி செய்யவில்லையோ அந்த மூடன் ஆத்மாவைக் கொன்றவனாகிறான். ஏனெனில் பொய்மையைக் கைக் கொண்டதால், உண்மையாகிய தன்னை அழித்து விடுகின்றான்" - விவேக சூடாமணி 4
 
2.இங்கே இவ்வுடலிலேயே சத்துவகுணம் நிறைந்த மனதில் புத்தி குகையில் (பிரமரந்திரம்) அவ்யாத்ருத ஆதாசத்தில் (நெற்றி நடுநிலையில்) சிறந்த ஒளியுடன் ஆத்மாவானது நடுப்பகல் சூரியன்போல் தனது ஒளியால் இவ்வுலகனைத்தையும் பிரகாசிப்பித்துக் கொண்டு விளங்குகின்றது" - விவேக சூடாமணி 132
 
3.அடக்கப்பட்ட மனத்தால் உன்னிடத்திலேயே நீ, உன்னுடைய ஆத்மாவை  இதுதான் நான் என்று புத்தியின் தெளிவால் நேராக அறிவாயாக."
 
"பிறப்பு இறப்பு ஆகிய அலையுடன் கூடிய பிறவிக்கடலை கடப்பாயாக. பிரம்ம ரூபத்துடன் நிலைபெற்றவனாய், செய்ய வேண்டியதைச் செய்தவனாய் ஆவாயாக." - விவேக சூடாமணி 136.
 
வேதம் காட்டும் வழியில் முத்தி அடைதற்பொருட்டு முயற்சி செய்யாத மனிதர் அனைவரும் மூடர்களா? தங்களுடைய ஆத்மாவைத் தாங்களே கொன்றவர்களா? ஐயோ, தலை சுற்றுகிறதே!
 
மீண்டும் அவ்வை மூதாட்டி வருகிறாரே ! என்ன சொல்லப் போகிறார் என்று கேட்போம்:
 
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் 
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை 
திருவா சகமும் திருமூலர் சொல்லும் 
ஒருவா சகமென் றுணர். - நல்வழி - 40.
 
என்னவிந்தை! திருக்குறளும், வேதங்களின் சிகரமான உபநிஷதங்களும், அப்பர், சம்பந்தர், சுந்தரர்பாடிய தேவாரமும், பரஞ்சோதி முனிவரின் சிவஞான போதமும், மாணிக்கவாசகரின் திருக்கோவையார், திருவாசகமும், திருமூலர் திருமந்திரமும் ஒரே கருத்தையே வெளிப்படுத்துகின்றனவா?