book

தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.கே.எஸ். கலைவாணன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :64
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - தமிழ் நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், டி.கே. எஸ். கலைவாணன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 
                                  தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் குறித்து: தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் (செப்டம்பர் 7, 1867 - நவம்பர் 13, 1922) 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர். கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க (Proscenium) மரபிற்கேற்ப உருபெற்றது சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான். தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படும் இவர் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றில் இப்போது 18 நாடகங்களுக்கான பனுவல்களே கிடைத்துள்ளன. புதுச்சேரியில் அமைந்துள்ள இவரது சமாதி புதுவை அரசால் பாதுகாக்கப்படுகிறது.

அறுபத்து எட்டு நாடகங்கள் எழுதிய சுவாமிகளின் நாடகங்களுள் பதினாறு நாடகங்கள்தான் தற்போது அச்சில் வெளியாகி இருக்கின்றன. அவற்றை அச்சிட்டு தமிழ் உலகுக்கு முதலில் தந்தவர் அவ்வை சண்முகம். வள்ளி திருமணம், கோவலன், சத்தியவான் சாவித்திரி, அபிமன்யு சுந்தரி, சதி அனுசூயா, சுலோசனா சதி, பக்த பிரகலாதன், அல்லி அர்ஜுனா, பவளக்கொடி, லவகுசா, இராமாயணம், அரிச்சந்திரா மயான காண்டம், நல்ல தங்காள், சுத்ராங்கி விலாசம் ஆகிய நாடகங்கள் தவிர, ரோமியோ ஜுலியட், சிம்பலைன் (ஷேக்ஸ்பியர்) போன்றவை சுவாமிகள் எழுதிப் பிரபலமான நாடகங்களாகும்.                                                                                             
'நாடகம் கலைக்கரசு, நாட்டின் நாகரிகக் கண்ணாடி, பாமரர்களின் பல்கலைக்கழகம், ! 
உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, ! 
உள்ளத்தில் புதைந்து கிடக்கும் அன்பையும் அறிவையும் தூய்மை யையும் வெளிப்படுத்தி மக்களைப் பயன்படுத்தும் மகத்தான சக்தி'
ஆம் நாடகக் கலைக்காகவே |

வாழ்ந்து, தம் வாழ்நாளெல்லாம் நாடகக் கலைக்கே அர்ப்பணித்த என் அன்புத்தந்தையார் தமிழ் நாடகமேதை பத்மபூரீ அவ்வை சண்முகம் அவர்களின் பொன்மொழிகள்தான் இவை நாடகம்தான் அவர் உயிர்மூச்சு தம் ஆறாவது வயதிலேயே தமக்கு நாடகக் கலையினைப் பயிற்றுவித்த - தம் குருநாதராக விளங்கிய தமிழ் நாடகத் தந்தை'யெனப் போற்றப்பெறும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளிடம் மாறாத பாசமும் பக்தியும் கொண்டிருந்தார் என் தந்தையார் சுவாமிகளின் பிறந்த நாளான செப்டம்பா 7-ஆம் நாளில் ஆண்டுதோறும், அவருக்கு விழா எடுத்தவர் அது மட்டுமல்லாமல், சுவாமிகளின் புகழ்பெற்ற நாடகங்களான சீமந்தனி, பக்த பிரகலாதா, அபிமன்யுசந்தரி, பவளக்கொடி, சுலோசனாசதி, சதி அனுசூயா மற்றும் கோவலன் ஆகிய வற்றைச் சொந்தமாகப் பதிப்பித்து நூல் வடிவில் கொண்டு வந்தார். -    கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன்.  
                                                                                                                                                                                     
சுவாமிகளின் ஆயிரக்கணக்கான மாணாக்கர் கூட்டத்தில் அடியேனும் ஒருவன், அவர் வாழ்ந்த காலத்தில் நான் அறியாச் சிறுவன் நன்கு அறிமுகப்படுத்தும் அளவுக்கு உறவாடிப் பழகியவனல்லன்.