book

கற்பனையான உயிர் உருக்களின் புத்தகம்

₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. சுகந்தன், போர்ஹெஸ், மார்கரீட்டா கெரேரோ
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388133319
Add to Cart

யதார்த்தத்தின் விலங்குக்காட்சி சாலையிலிருந்து புராணிகங்களின் பிரபஞ்சத்திற்கு வாசகன் அழைத்துச் செல்லப்படுகிறான். ஒரு படைப்புயிரை விளங்கிக்கொள்வது பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வதற்குச் சமமானது. இவ்வுயிர்கள் பிரதானமாய் கிரேக்க மற்றும் ரோமானியத் தொன்மங்கள் சார்ந்தவை. இதில் உள்ள யாவும் விலங்குகள் மாத்திரமே அல்ல. தவிர கற்பனையானவை மட்டுமேயல்ல. மாண்ட்ரேக் என்ற மாண்ட்ரகோரா என்பது நிஜத்தாவரம். வகைப்பாட்டியல் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. தவிர, உயிர்களின் நாமகரண வேர்ச்சொல் அகராதியாகவும் மாறுகிறது இந்நூல். சீன,பௌத்த, இந்துமதப் புராணிக விரிவெல்லைகளில் பயணிக்கிறான் வாசகன். ஓவிட்டின் உருமாற்றங்கள் அதிகம் இடம்பெறுகின்றன. இவற்றை மூடநம்பிக்கைகள் என ஊதித்தள்ளிவிட முடியாதபடி ராபர்ட் பர்ட்டன், ஜேம்ஸ் ஃபிரேஸர், பிளாட்டோ, பிளினி, ஷோப்பன் ஹேவர் ஆகிய ஆளுமைகளின் சிந்தனைகள் லாவகமான முறையில் போர்ஹெஸ்ஸூக்கு உதவுகின்றன. காஃப்கா, சி.எஸ்.லூவிஸ், எட்கர் ஆலன் போ போன்ற படைப்பாளிகளின் (மேற்கோள்கள், கவிதை வரிகள்) விபரீதக் கற்பனை உயிர்கள் இந்நூலை விநோத இலக்கியக் கலைக்களஞ்சியமாக மாற்றுகின்றன. போர்ஹெஸ்ஸின் பாணியில் எப்போதும் போல கையடக்கமாக. - பிரம்மராஜன்