book

சகாக்கள்

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நிர்மல்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

நிர்மல் சகாக்கள் புத்தகம் வாசகர்களை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் பக்கம் அழைத்துச் செல்கிறது. அவர்களின் உலகளாவிய உரிமைகள் குறித்த ஆழமான தேடலுக்கு இது வழிவகுக்கிறது. நூலகங்களில் இந்தச் செயல்பாடுகள் இவர்களுக்குச் சாத்தியமா? கடற்கரை சென்றால் நாம் இவர்களைச் சிந்தித்து இருக்கிறோமா? அலுவலகங்கள் மற்றும் கடைகளில் இவர்களின் தடைகளை இந்தப் படைப்பு கேட்கிறது. படிகளில் பாய்ந்தேறும் நாம் முதுமையில் மாற்றுத்திறனாளிகளாகக் கூடும். தெரிந்தும் ஏனிந்தப் பாராமுகம் என இந்த நூல் நம்மை யோசிக்க வைக்கிறது. சாய்வுப்பாதைகள் 1990களுக்குப்பின் உருவானது. அந்தத் திருப்புமுனை எப்படி நிகழ்ந்தது என்பதை இது விளக்குகிறது. இந்த நெடும்பயணத்தின் நாயகர்கள் யாவர்? பிளாட்டோ மற்றும் தாகூரை ஹிட்லரோடு இணைக்கும் சூழல் எது? இதை ஒரு பரபரப்பான திரைப்படம் போல ஆசிரியர் பேசுகிறார். ரொமான்ஸ் மற்றும் கிளுகிளுப்பு உட்பட ஓர் ஆய்வு நூலை வித்தியாசமாகப் படைத்துள்ளார். எழுத்தாளர் நிர்மல் அவர்கள் இங்கு மிக நேர்த்தியாக எழுதியுள்ளார். இத்தகைய ஆவணங்கள் தமிழ் சூழலுக்கு மிகவும் தேவை.