book

கம்பாநதி

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வண்ணநிலவன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789355230669
Out of Stock
Add to Alert List

அடுத்தடுத்து நிகழ்வதற்காக எவ்வளவோ விஷயங்கள் காத்திருக்கின்றன, என்ற வரி நாவலின் இடையே வந்தாலும், அதற்கும் முன்பே எத்தனையோ விஷயங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. கம்பா நதி என ஒன்று ஓடியதோ ஓடவில்லையோ, இப்போது அதற்கான குட்டி மைய மண்டபம் மட்டும் இருக்கிறது. மண்டபத்தின் கீழே கசங் கணக்காகத் தண்ணீர் கிடக்கிறது. இதுதான் நாவலின் பரிமாணமாக விரிகிறது. இந்நாவலுக்குள் ஏராளமான மனுஷர்களும் மனுஷிகளும் வந்துகொண்டே இருக்கிறார்கள். நதியின் அலைவீச்சு தன்னுள் மிதக்கும் பலவற்றையும் கரையோரத்தில் ஒதுக்குவதைப்போல இவர்களும் ஒதுக்கப்படுகிறார்கள். ஆனாலும் அவர்கள் நதியில் மிதந்து வந்ததற்கான பலாபலன்களை நம் மனத்துக்குள் நுழைத்துவிடுவதில் இந்த எழுத்து புரியும் மாயம் அற்புதமானது. சாதாரண மனிதர்களின் இருப்பையும் அவர்களின் தேடலையும் ஆசை அபிலாஷைகளையும் ஏக்கங்களையும் தோல்விகளையும் வரலாற்றில் நிறுத்திவிட முடியுமென இந்த நாவல் நம்முன்னே கல்லெழுத்தாகப் பதிய வைக்கிறது. நம் சமூகத்தின் பெண்ணினம் இந்த நவீன யுகத்திலும் எதிர்கொள்கிற காவியச் சோகம் நாவலினூடேவெளிப்பட்டு நம்மை உலுக்குகிறது.