
கொங்குநாடும் சமணமும்
₹360+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செ. இராசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :304
பதிப்பு :3
Published on :2022
ISBN :9788123432427
Out of StockAdd to Alert List
தமிழ்ப் பண்பாட்டில் ஆழ வேர்விட்டுச் செழித்த சமயங்களில் ஒன்று சமணம். சமணம் பற்றிய நுண்ணாய்வுகள் நம் சொந்த பண்பாட்டை விளங்கிக் கொள்வதற்கு அடிப்படைகளாக அமைபவை. இந்த வகையில் சமணம் பற்றி மூலாதாரமான பல்வகைச் சான்றுகளை ஒருங்குதிரட்டி ஆழமும் விரிவும் கொண்ட நுண் ஆய்வாக இந்நூல் விளங்குகிறது.
புலவர் செ. இராசு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல், தொல்லியல் துறையில் பேராசிரியராக, துறைத்தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; இப்போது ஈரோட்டில் வசித்து வருகிறார்.
தமிழ் வரலாற்றுக்குத் தேவையான கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் முதலான மூலாதாரச் சான்றுகளை நுணுக்கமும் விளக்கமும் கொண்ட பதிப்புகளாக வெளியிட்டவர். இப்போது கொங்கு வட்டார இலக்கியமான அண்ணன்மார் சாமி கதைப்பாடலுக்குச் செம்பதிப்பை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
