book

இயற்கையின் குழந்தை மனிதன் இரண்டாம் தொகுதி

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :போப்பு
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :173
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

தலையில் செதில் செதிலாக பொடுகு உதிருமென்றால் அது தலையில் அழுக்கு சேர்ந்ததன் விளைவல்ல. பெருங்குடலில் வறட்சியும், வெப்பமும் மிகுந்து விடுவதன் வெளிப்பாடே ஆகும். எனவே பொடுகினைப் போக்க என்ன சாம்பு போடலாம் என்று விளம்பரத்தையும், கூகுலையும் தேடுவதை விடுத்து பெருங்குடல் வறட்சியைப் போக்க என்ன உண்பது என்று அதற்குரிய வழியைத் தேட வேண்டும் என்கிறது இதில் உள்ள ஒரு கட்டுரை. மகளிரில் சீரான உதிரப்போக்கு உடையோர் அரிதாகிக் கொண்டே வருவது குறித்து நூல் விவாதிக்கும் இடங்கள், அதைக் களையும் வழிமுறைகள், விரதத்தின் சமூகப் பயன்பாடு மற்றும் அதைக் கையாள்வது குறித்த எச்சரிக்கைகள் என சொற்ப வார்த்தைகளின் தெளிவாகச் சொல்லும் பல கட்டுரைகள் இருக்கின்றன. இப்படியான விஷயங்களைச் சொல்வதற்கு தமிழை இவ்வளவு இலகுவாகப் பயன்படுத்த முடியுமா என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது.