book

நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 4) ஸ்டான் சாமி - ஒரு நிறுவனப் படுகொலை

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. மார்க்ஸ்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

அவர் நம் தமிழகத்தில் பிறந்தவர். தமிழர். ஆனால் அவரது கருணை மனம் உலக அளவில் விரிந்திருந்தது. ஒரு வாழ்நாளை எளிய பழங்குடி மக்களுக்காக அந்த மக்களோடு வாழ்ந்தவர். அவரது கடைசி ஆசைதான் நிறைவேறாமல் போய்விட்டது. எந்தப் பழங்குடி மக்களை அவர் நேசித்தாரோ அந்த மக்கள் மத்தியில் வாழ்ந்த அவரின் கடைசி விருப்பு அவர்கள் மத்தியில் சாவதுதான். அதை அவர் வெளிப்படையாகச் சொன்னார். கெஞ்சினார். வெளிப்படையாகக் கார்பொரேட்களின் நலன் காக்கும் அரசும், அவர்களின் கைப்பவைகளாகிப் போன சிறப்பு நீதிமன்றங்களும், அவர்கள் உருவாக்கி வைத்துள்ள கொடுஞ் சட்டங்களும் அவரின் கோரிக்கைகளைக் காலில் போட்டு மிதித்தன. கோரிக்கை நிறைவேறாமலேயே அவர் செத்துப் போனார். அவர் ஒரு சிறைக் கைதி. இறந்த பின்னும் அவர் சிறை விதிகளை அனுசரித்தாக வேண்டும். அவர் மும்பையிலேயே எரியூட்டப்பட்டார். அவரது சாம்பல்தான் அவர் நேசித்த அந்தப் பழங்குடி மக்களின் மண்ணில் விதையாய் விழ முடிந்தது. Father Stan Swamy died following medical complications என அரசு கதையை முடித்தது. அவரது வாழ்வு, பணி, போராட்டங்கள், பீமா கொரேகான் வழக்கில் அவர் கைது செய்யப்பட்ட வரலாறு எல்லாவற்றையும் துல்லியமாகச் சொல்கிறது இக்குறுநூல்.