சின்னஞ் சிறுவர்கள் சிந்திக்க சில கதைகள்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மழலைப்பிரியன்
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2019
ISBN :9789387854345
Add to Cartகுழந்தைப் பருவம் நாற்றங்கால் பருவம் போல அதிமுக்கியமானது. அன்பையும், மனித நேயத்தையும், நல்லொழுக்கத்தையும் கூட்டி வீரியமாக வளர்க்க வேண்டிய பருவம் . சரித்திர சிகரங்களைத் தொட்டவர்கள், பெற்றோரின் மடியில் இத்தகைய பண்புகளுடன் வளர்ந்தவர்கள் தான். ஆனால் குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்தெடுப்பதில் மிக முக்கிய இடம் வகிக்கும் குழந்தை இலக்கியம் அவ்வளவு வளராதது கவலையளிக்கிறது. குழந்தைகள் மனித நேயத்தை மறந்து எந்திரத்தனத்துக்குமாறி வரும் வேளையில் அவர்களை ஆக்ககரமான முறையில் வளர்த்து எடுப்பதற்கு அவர்களுக்கான எழுத்துக்கள் அதிகம் தேவை.
அந்த நோக்கத்தின் அடிப்படையில் உருவானதே ‘சின்னஞ் சிறுவர்கள் சிந்திக்க சில கதைகள்’என்ற இந்த சிக்ஷறுவர் நூல். தனது இலக்கை நோக்கிச் செலுத்தும் கப்பலைப் போல இதில் இடம்பெற்றுள்ள கதைகள் குழந்தைகளுக்கு சரியான திசை காட்டியாக விளங்கும். இவை தினமணி குழந்தை இலக்கிய இணைப்பிலும் தீக்கதிர் குழந்தைகள் பூங்கா பகுதியிலும் வெளிவந்தபோது வாசகர்களிடம் உற்சாகமான வரவேற்பை பெற்றன. இந்தக் கதைகள் புத்தக வடிவம் பெற்று தற்பொழுது தங்கள் கைகளில் தவழ்கிறது.
இந்நூல் குழந்தைகளுக்கு ஏற்ற நூலகும் என்பது எனது கருத்து.
இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் தமது முன்னுரையில் கூறியிருக்கிறார்.