book

ஈராக் சிங்கம் சதாம் உசேன்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788195139927
Add to Cart

அமெரிக்காவின் ஆஸ்தான எதிரியாகிப் போன சதாம் உசேன் மீது அமெரிக்கா சாட்டிய குற்றப்பத்திரிகை மீக நீளமானது. மெசபடோமிய நாகரிகம் செழித்து வளர்ந்த நாடான ஈராக்கில் 26 ஆண்டுகள் அதன் அதிபராக இருந்த சதாம் உசேன், அமெரிக்காவின் மரண தண்டனைக் கைதியாக்கப்பட்ட நிலையில், அந்த நிகழ்வின் பின்னணியில் ஏராளமான வன்முறைகளும் சதித்திட்டங்களும் அரங்கேறி இருக்கின்றன. ஆரம்பத்தில் அமெரிக்காவும் சதாமும் இருந்த அந்நியோன்யம் உலகம் அறிந்ததுதான். ஈரான்-ஈராக் போரில் சதாமுக்குப் பக்கபலமாக இருந்தது இந்த அமெரிக்கா. ஆயுத உதவியும் செய்தது. பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பலியான பிறகு ஒருவழியாக யுத்தம் முடிவுக்கு வந்தது. ஈராக் அதிபர் சதாம் உசேனுக்குப் பக்கபலமாக நின்ற அமெரிக்கா சாட்டையை அவருக்கு எதிராகச் சுழற்ற வேண்டிய தருணம் வந்தது. குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த போதுதான் பிரச்சினையே வெடித்தது. நாடுகளை ஆக்கிரமிப்பது தனக்கு மட்டுமே உரிய அங்கீகாரம் என்று அமெரிக்கா எண்ணியதன் விபரீதம்தான் அது. சதாம் உசேன் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை வழக்காகப் பதிவு செய்திருந்தது அமெரிக்கா. ஒரு லட்சத்து எண்பதாயிரம் குர்து இன மக்களை சித்திரவதை முகாமில் அடைத்து விஷ வாயு பாய்ச்சியும், சுட்டும் கொன்றதாக மற்றொரு வழக்கையும் சதாம் உசேனை மிரட்டுவதற்கான பட்டியலில் இருந்தது. பதுங்கு குழியிலிருந்து சதாம் பிடிபட்ட போது, “ஈராக் மக்களுக்கு இது நல்ல விடுதலை. இனி உலகம் நீங்கள் இல்லாமல் நன்றாக இருக்கும் மிஸ்டர் சதாம்!” என்று கூறி புளகாங்கிதம் அடைந்தார் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். ”மரண தண்டனை பற்றி எனக்குக் கவலையில்லை. நான் எனது நாட்டுக்காகவும் அரபு நாடுகளுக்காகவும் கவுரவத்தோடும், பயம் இல்லாமலும் மரணத்தைத் தழுவுவேன்” என்று அமெரிக்கத் தூக்குக் கயிற்றைப் பார்த்தபடி மெய்சிலிர்ப்புடன் கர்ஜித்தார் சதாம். ஈராக் அதிபர் சதாம் உசேனின் உயிர்த்துடிப்பு மிக்க வரலாற்ற உணர்வு எழுச்சியோடு தன் பேனா முனையின் கூர்மையால் அற்புதமான வரைவு ஓவியமாக இந்நூலில் எழுத்தாளர் திரு. ஜெகதா அவர்கள் வரைந்துள்ளார். வாசகர்களும் அதனை மெய்யாகவே வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.