book

நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும்

₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. தனஞ்செயன்
பதிப்பகம் :பரிசல் புத்தக நிலையம்
Publisher :Parisal Puthaga Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :244
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789391949426
Out of Stock
Add to Alert List

தமிழக நாடோடிச் சமுகங்களை முதன்மைப் படுத்தி,அவர்தம் வழக்காறுகள், இனவரைவியல்,வாய்மொழி வரலாறு, உலகக் கண்ணோட்டம் ஆகிய கருத்தியல் தளங்களில் இந்நூல் விரிவாக விவாதிக்கிறது.வாய்மொழி வரலாற்று முறையியல்களில் 'குறிப்பிட்ட, சமுதாயத்தின் கடந்த காலம் பற்றிய கூட்டுக் கண்ணோட்டமாக அமைவதும்,அதில், மக்கள் தாங்களே தங்கள் வரலாற்று ஆசிரியர்களாக ஆவதும்' ஆகிய இயல்புகள் உடையது நாட்டார் வரலாறு. அம் முறையிலை அடியொற்றிப், புராண மரபுகள் ஊடாக நாடோடிகளின் வரலாறு பேசப்படுகிறது. தனது இருத்தலின் வாயிலாகக் குறிப்பிட்ட மக்களின் வாழ்க்கை முறையின்பால் தாக்கத்தை ஏற்படுத்துவது எதுவோ அதுவே உலகக் கண்ணோட்டம் ஆகும்' என்னும் கருத்துருவத்தை அடியொற்றி, அலைகுடிகளின் நடத்தைமுறைகள், வழக்காறுகள் ஆகியவைப் பிரதிபலிக்கும் உலகக் கண்ணோட்டம் பற்றி இந்நூல் விரிவாக ஆராய்கிறது. அத்துடன் நாடோடியம், தனது உருவகப்பொருளில், சாப விமோசனத்திற்கான புனித யாத்திரையாக மீவியல் வெளி, காலம் கடந்து, எவ்வாறு முடிவில்லாமல் தொடர்கிறது என்பதையும் விளக்குகிறது.