
அடிக்கடி தோன்றும் ஐயங்கள் (தமிழ் அறிவோம் 13)
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மகுடேஸ்வரன்
பதிப்பகம் :தமிழினி
Publisher :Tamizhini Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
தொன்மையும் நுண்மையும் வளமும் வளர்ச்சியுமாய்ப் பன்முகத்தன்மை அடைந்த மொழி தமிழ். முறையாகக் கற்றறிந்தவரையும் ஐயுறச் செய்யும் ஆற்றலுடையது. எல்லாம் அறிந்ததைப் போல் இருந்தாலும் எதிர்பாராத இடத்தில் ஓர் ஐயம் தோன்றிவிடும். பதினொரு / பதினோரு, ஆறை / ஆற்றை மட்குதல் / மக்குதல், வாய்பாடு / வாய்ப்பாடு இவற்றில் எது சரி என்று யாராயினும் தடுமாறியிருப்போம். ஒருவேளை இதுதான் சரியென்று தெரிந்தாலும் அது ஏன் என்பது தெரியாது. எழுத்துப் பணியில் உள்ளோர் மட்டுமில்லை, ஆசிரியர் மாணாக்கர் தொடங்கி சிறுமடல் எழுதுவோர் வரைக்கும் எல்லாருமே திடீரென்று தோன்றும் தமிழ் ஐயங்களால் திகைக்கிறோம். அவர்கட்குக் கைவிளக்காவது இந்நூல்.
