
நெடுநல்வாடை
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் இரா. ருக்மணி
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
Out of StockAdd to Alert List
நெடுநங்வாடை என்றதும் என் மனதில் நினைவுக்கு வருவது என்னுடைய கல்லூரி வாழ்வின் முதல் நாள். அன்று பேராசிரியர் முனைவர் ந. காந்திமதிலட்சுமி அவர்கள் 'நெடுநல்வாடை' யினை நடத்தியபோது, மாலை வீட்டிற்குச் சென்று மீண்டும் ஒரு முறை பாடலின் தொடக்கமான கூதிர்கால வருணனையை அசை போட்டு மகிழ்ந்த நினைவு இன்றும் என் நினைவுகளில் பசுமையாகப் பதிந்திருக்கிறது. சங்க இலக்கியங்களை வாசிப்பதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டதற்குக் காரணமும் அவர்கள்தான். எந்த நேரத்தில் அவர்கள் இல்லத்றிக்குச் சென்றாலும் இன்முகத்தோடு வரவேற்றுக் கருத்துக் களைப் பரிமாறி செவிக்குணவோடு வயிற்றுக்குணவும் நல்கும் இனிய பண்புடையவர். 'நெடுநல்வாடை' நூல் வெளி வரும் இவ்வேளையில் ஆசிரியப் பெருந்தகை பேராசிரியர் முனைவர் ந. காந்திமதிலட்சுமி அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்திற்கும் மேலாக, என்னை இலக்கியம் கற்பதிலும் ஆய்வதிலும் கருத்தைச் செலுத்த வைத்த எம் கல்லூரி முதல்வர் மறைந்த டாக்டர்.பா. சௌந்தரா அவர்களின் பணியும் மறக்கற்பால தன்று பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகள் அவர்கள் இல்லத்திலேயே கழியும். அவர்கள் என்னுள்ளத்தில் விதைத்த வித்துக்கள் நிச்சயம் விருட்சமாகும் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு. நல்ல ஆசிரியர்களால்தான் நல்லதொரு மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.
