book

ISIS கொலைகாரன்பேட்டை

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா.ராகவன்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789390884568
Out of Stock
Add to Alert List

அல் காயிதாவுக்குப் பிறகு சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது ஐ.எஸ் என்கிற Islamic State தீவிரவாத அமைப்பின் தோற்றமும் செயல்பாடுகளும். எந்தவித சித்தாந்தப் பின்னணியும் பெரிதாக இல்லாத இந்த இயக்கம், மத்தியக் கிழக்கில், குறிப்பாக இராக்கிலும் சிரியாவிலும் அப்பாவி மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்து வருகிறது. இராக்கில் மட்டுமே பல்லாயிரக் கணக்கான ஷியா முஸ்லிம்களின் கோர மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறது. எண்ணிலடங்காத மக்கள் வாழ வழியின்றி சிரியாவை விட்டுத் தொடர்ந்து இடம் பெயர்ந்துகொண்டிருப்பதில் ஐ.எஸ்ஸின் பங்கு கணிசமானது. சிரியா உள்நாட்டு யுத்தங்களில் ஐ.எஸ். ஒரு முக்கியக் கண்ணி. மத்தியக் கிழக்கில் மட்டும் ரத்த வெறி கொண்டு ஆடிக்கொண்டிருந்த ஐ.எஸ். இன்றைக்குப் பிற நாடுகளின் மீதும் தனது குருதிக் கரங்களை விரித்து நசுக்கப் பார்க்கிறது. இலங்கையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களின் பின்னால் ஐ.எஸ். என்கிறார்கள். இந்தோனேஷியாவில் வலுவாகக் காலூன்றிவிட்டிருக்கிறது இப்போது என்கிறார்கள். யார் இவர்கள்? ஐ.எஸ்ஸின் திகிலூட்டும் வளர்ச்சி மற்றும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ள மத்தியக் கிழக்கு தேசங்களின் ஜாதி அரசியல் மற்றும் எண்ணெய் அரசியலின் வேர்வரை விளக்குகிறது இந்தப் புத்தகம்.