அடையாள மீட்பு (காலனிய ஓர்மை அகற்றல், ஆப்பிரிக்க இலக்கிய மொழி அரசியல்)
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கூகி வா தியாங்கோ, அ. மங்கை
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :142
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788194937104
Add to Cartதேசிய, சனநாயக, மனித குல விடுதலை இதன் மையம். எமது மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்து மீட்டுருவாக்கம் செய்வதற்கான அறை கூவல், ஆப்பிரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான புரட்சிகர சொல்லாடல்களுடான, புதுப்பிக்கப்பட்ட மீள் தொடர்புக்கான அறைகூவல் ஆகும். மனித இனத்தின் உண்மை மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்வதற்கான கூக்குரல் அது; போராட்ட மொழியை முன்னெடுப்பதற்கான குரல் அது. அதுதான் நமது வரலாற்றுக்கு அடிப்படையான பொதுமை மொழி. போராட்டமே வரலாற்றைப் படைக்கிறது. போராட்டமே நம்மை உருவாக்குகிறது. போராட்டத்தில் தான் நமது வரலாறு, மொழி, இருப்பு தங்கியுள்ளது. அது நாம் எங்கிருந்தாலும் தொடங்கும்; எது செய்தாலும் இருக்கும். அப்போது நாம் மாட்டின் கார்ட்டர் கண்ட கோடிக்கணக்கான மக்களுடன் சேர்வோம்: நாம் கனவுகாண உறங்குபவர் அல்ல; உலகை மாற்றக் கனவு காண்பவர்கள்.