தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும், உழைப்பாளர் சமூக உண்மைநிலையும், சாதியும் (கி.பி. 600 - 1565)
₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ஜெயசீல ஸ்டீபன், கி. இளங்கோவன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :157
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788123441283
Add to Cartஇந்த நூல் தமிழகத்தில் இருந்த பல்வேறு தொழில்கள் , சமுதாயத்திற்குள் ஏற்பட்ட பிணைப்புகள் , உழைப்பாளர்களின் செய்கைகள் மற்றும் வளர்ச்சி பற்றி ஆழமாக ஆய்வு செய்கிறது . சமுதாயங்களுக்கான வரி , தொழில் வரி , குடும்ப வரி வசூலிப்பு , வேளாண்மை மற்றும் கைவினைஞர் தொழிலுக்கு விதிக்கப்பட்ட வரிகள் , வரிச்சுமை . அரசாங்க வரிவசூல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல் பற்றி எடுத்துக் கூறுகிறது . பண்டமாற்று முறையிலிருந்து பணப் பொருளாதாரத்திற்கு மாறிய காலகட்டத்தில் இந்துக்கோயில் ஊழியர்கள் மற்றும் அடிமைகளின் வாழ்நாள் அனுபவங்கள் , இந்துமடங்களில் வேலைசெய்த ஆண் , பெண் பணியாளர்கள் , அடிமைகள் வாழ்க்கை நிலை , மற்றும் சமூகத் தாக்கம் குறித்து விரிவாக விளக்குகிறது .
தமிழகத்தில் சாதிகளின் எழுச்சியும் , பழங்குடி குழுக்கள் உடனான தொடர்புகளும் , உயர் மற்றும் கீழ்நிலை தகுதிகள் , வலங்கை , இடங்கை என்ற இரண்டு பிரிவுகளில் மக்களைப் பொருத்துதல் , உட்சாதிகளின் தோற்றம் , சமூக பாரபட்சங்களின் வளர்ச்சி , தீண்டத்தகாதவர்களும் புதிய வளர்ச்சியும் , அடிமைகள் மற்றும் சாதி விவர சமூக உண்மைநிலை குறித்த வியப்பூட்டும் தகவல்களும் இந்த நூலில் உள்ளன . முதலியார் மற்றும் பிள்ளை என்பவை சாதியைக் குறிப்பதாக இல்லை என்றும் , சைவ மடங்களில் மிகுந்த மரியாதைக்குரிய பட்டமாக இருந்ததை காலப்போக்கில் மக்கள் தங்கள் பெயருக்கு பின்னால் சேர்க்க ஆரம்பித்ததை ஆதாரங்களோடு எண்பிக்கிறது .