book

எனையிசைக்கும் இன்னிசையே...!

₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மித்ரா
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :316
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

ஆனாலும் அருளின் கண்களிலிருந்து தப்பவில்லை, “திறமைக்கும் உடல் அமைக்கும் என்ன சம்பந்தம்? ஏன் நிராகரிக்கணும்?” என்றான் வெம்பியபடி.
“அது அப்படித்தான். ஏன்னா இந்தச் சமூகம் எங்களைத் தீண்டத்தகாதவர் போன்றே தான் பார்க்கும். சின்ன வயசுல எனக்கு யூஸ் பண்ண பேபி பாத் சோப்பால அலர்ஜி வரவும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போயிருக்காங்க. அப்போ அவங்க கொடுத்த மருந்தோட வீரியம் அதிகமா இருக்க, பக்கவிளைவா மெலனின் குறைப்பாடு வந்திருக்கு. இதுதான் காரணம்னு கண்டுபிடிக்கவே எனக்குப் பன்னிரண்டு வருஷமாச்சு. இதுல என் தப்பு என்ன இருக்கு? இது ஒண்ணும் சரிபடுத்த முடியாத நோய் இல்லை, ஜஸ்ட் சருமத்துல உள்ள மெலனின் குறைபாடு, அவ்வளவுதான், அதை யாரும் புரிஞ்சிக்கிறதா இல்லை...'' என்றவளுக்கு வேதனையல்ல... கோபம்தான், தன்னை ஒதுக்கிய சமூகத்தின் மீது...