book

மௌனப் பிள்ளையார்

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாவி
பதிப்பகம் :மஹாலக்ஷ்மி பதிப்பகம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Add to Cart

தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர். அத்தனை தமிழர்களும் அறிந்த எழுத்தாளர் சாவி. பேராசிரியர் கல்கி அவர்களிடம் பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கியவர். கல்கி, ஆனந்த விகடன் இவ்விரு பத்திரிகைகளிலும் நீண்டநாள் பணியாற்றி அனுபவம் பெற்ற பின் தினமணி கதிர் ஆசிரியர் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தியவர். கலைஞர் மு. கருணாநிதி, குங்குமம் வார இதழைத் தொடங்குவது என்று முடிவு செய்தபோது, அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்கும்படி கலைஞர் அழைத்தது ஆசிரியர் சாவியைத்தான். ஓராண்டு காலம் அந்த இதழைச் சிறப்பான முறையில் நடத்தி கலைஞரிடம் ஒப்படைத்த பிறகு சொந்தப் பத்திரிகை தொடங்கும் முடிவில் விலகினார். 1979-ல் சாவி வார இதழைத் தொடங்கினார். இன்று புகழ் பெற்று விளங்கும் பல எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. உலக நாடுகள் பலவற்றைப் பலமுறை சுற்றிப் பார்த்தவர். வைகாளியில் மகாத்மாஜியோடு கூடவே கிராமம் கிராமமாக நடந்து சென்று அந்த அனுபவங்களை "நவகாளி யாத்திரை' எனும் தலைப்பில் கல்கியில் எழுதினார். அந்தக் கட்டுரைகளைப் படித்த ஆசிரியர் கல்கி 'தார்மிகக் கட்டுரைகள்' என்று தமது முன்னுரையில் பாராட்டியுள்ளார். வாஷிங்டனில் திருமணம்' என்ற இவரது நகைச்சுவை நவீனம் தமிழ் வாசகர்களின் பரபரப்பான வரவேற்பைப் பெற்றது. இதுவரை இரண்டு லட்சம் புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளன. தலைவர் காமராஜரிடம் நெருங்கிப் பழகியவர். தேசியப் போராட்டத்தில் ஈடுபட்டு 1942-ல் ஒன்பது மாத காலம் சிறைவாசம் புரிந்தவர்.