book

ஊர் வம்பு

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மெரீனா
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :148
பதிப்பு :5
Out of Stock
Add to Alert List

இந்த நூல் ஊர் வம்பு, மெரீனா அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.            
எழுத்தாளர் பற்றி : மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், கார்ட்டூனிஸ்ட் என்று பன்முகத்தன்மை வாய்ந்த பரணீதரன் என்று பரவலாக அறியப்படும் டி.எஸ். ஸ்ரீதரன். பயணக் கட்டுரைகள், ஆன்மிகக் கட்டுரைகள் எழுதும்போது அவர் பரணீதரன் . கார்ட்டூன் வரையும்போது ஸ்ரீதர். நாடகங்கள் எழுதும்போது மெரீனா. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த "அருணாசல மகிமை'தான் பள்ளி மாணவனாக இருந்த எனக்கு பரணீதரனை அறிமுகப்படுத்தியது. இமயமலைக்குச் சென்று பத்ரிநாத், கேதார்நாத் ஆலயங்கள் குறித்து அவர் எழுதிய "பத்ரி கேதார் யாத்திரை', காசி, ராமேஸ்வரம் யாத்திரை, ஆலய தரிசனம் உள்ளிட்டவைதான் இளம் வயதிலேயே என்னில் ஆன்மிக நாட்டத்தை ஏற்படுத்தியது என்பதை நான் இப்போது உணர்கிறேன். காளிதாசனின் ரகுவம்சத்தையும், ஆர்.கே. நாராயணின் "கைட்', "ஸ்வாமி அண்ட் ப்ரண்ட்ஸ்' நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்த பெருமையும் பரணீதரனையே சாரும். மெரீனா என்கிற பெயரில் இவர் எழுதிய "தனிக்குடித்தனம்', "மாப்பிள்ளை முறுக்கு', "மகாத்மாவின் மனைவி', "கஸ்தூரி திலகம்' போன்றவை ஆனந்த விகடனில் தொடராகவும், மேடையில் நாடகமாகவும் பெரும் பாராட்டைப் பெற்றன.