காரும் கதிரும்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த.நா. குமாரசாமி
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :188
பதிப்பு :1
Add to Cartவெளியே ஊர்ப்பாதையில் 'டோரியா' போட்ட சிற்றாடை கட்டிக் கொண்டிருக்கும்
சிறுமி ஒருத்தி மடியில் சில கருநாவற் பழங்களை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக
வாயில் போட்டு ருசி பார்த்தவண்ணம் கம்பி போட்ட அந்த ஜன்னல்முன் போவதும்
வருவதுமாயிருந்தாள். உள்ளே, புஸ்தகத்தில் லயித்திருக்கும் இளைஞனுக்கும்
அந்தச் சிறுமிக்கும் இடையே வளரும் நேசம் அவள் முகத்தில் பிரதிபலித்தது.
இளைஞனுடைய கவனத்தை தன்பால் எப்படியாவது இழுக்க வேண்டுமென்பதே அப்பாவையின்
நோக்கம். ஆனால், அவன் நினைவெல்லாம் எங்கோ நிலைத்துவிடவே அவள்
வெறுப்புற்றுத் தனக்குள்ளேயே, "என்னைத் திரும்பிப் பார்க்காமல் போனால்
போயேன்; எனக்கு மட்டும் என்ன அக்கறை, உனக்கு நாவற்பழம் கொடுக்க
வேண்டுமென்று? நானே தின்றுவிடுகிறேன்" என்று சொல்லிக்கொண்டாள். அவள்தான்
கிரிபாலா.